வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வெட்டுவானத்தில் தமிழ்நாடு வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா நடைபெற்றது.
மொத்தமுள்ள 81 குழுக்களில் தற்போது 31 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கரோனா சிறப்பு கடனுதவியாக ரூ.31 லட்சம் கடனாக வழங்கப்பட்டது. இவ்விழாவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் .
தகுந்த இடைவெளி இல்லாமல் கடனுதவி வழங்கும் காட்சி பின்னர் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் வீரமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், “கரோனா தாக்கத்தினால் மாவட்டம் முழுவதுமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு குறைந்த வட்டியில், நீண்டகால கடன்களுக்கான சிறப்பு கடனுதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது.இந்த கரோனா தாக்கத்தினால் அரசுக்கு சுமார் 15 ஆயிரம் கோடி முதல் ரூ.17 ஆயிரம் கோடி வரையில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, புதியதாக போடப்பட்டுள்ள திட்டங்களை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஆய்வு செய்யும் நிலையில் உள்ளார்” என்றார்.