ETV Bharat / state

மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன? - நன்னெறிப் பண்புகள் குறித்து அறிக்கை தாக்கல் - வேலூர் ஆட்சியர்

வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் நன்னெறி பண்புகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உமா மகேஸ்வரி வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்

author img

By

Published : Jul 14, 2022, 7:15 PM IST

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :

பள்ளி மாணவர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வர வேண்டும்.

  • மாணவர்கள் தினமும் பள்ளி சீருடையை சுத்தமாக அணிய வேண்டும்.
  • தலையில் எண்ணெய் தேய்த்து வர வேண்டும்.
  • கை, கால் நகங்களை சுத்தமாக வெட்ட வேண்டும் மற்றும் தலை முடியை சரியான முறையில் வெட்டப்பட வேண்டும்.
  • காலில் காலணி அணிய வேண்டும்.
  • மாணவர்கள் டக் இன் செய்யும் போது சீருடை வெளியில் வராத வகையில் இருக்க வேண்டும்.
  • பெற்றோர் கையொப்பத்துடன் வகுப்பாசிரியரிடம் அனுமதி பெற்றுத்தான் விடுப்பு எடுக்க வேண்டும்.
  • பிறந்த நாள் என்றாலும் மாணவர்கள் சீருடையில் தான் வரவேண்டும்.
  • மாணவர்கள் பள்ளிக்கு இருசக்கர வாகனம், மொபைல் போன் போன்றவற்றை பள்ளிக்கு கொண்டு வர அனுமதி இல்லை.
  • வகுப்பறையில் பாடங்களை கவனமாக கேட்க வேண்டும்.
  • ஆசிரியர் பேச்சை மாணவர்கள் கேட்க வேண்டும்.
  • மாணவர்கள் சீருடையில் பள்ளிக்கு வரும் போது கூடுதலாக கலர் டிரஸ் எடுத்துவரக்கூடாது.
  • வகுப்பில் மாணவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
  • அடிக்கடி கை, கால்கள் கழுவ வேண்டும்.
  • மாணவர்கள் எங்கு சென்றாலும் வரிசையாக செல்ல வேண்டும்.
  • மாணவர்கள் போதை பொருள்களை பயன்படுத்தக்கூடாது மற்றும் எந்த ஒரு டேட்டோ போன்றவற்றுடன் பள்ளிக்கு வர அனுமதி இல்லை.
  • மாணவர்கள் பள்ளிக்கு வரும் போது அவர்களின் சீருடை சட்டையிலுள்ள பொத்தான்களை கழட்டக்கூடாது.
  • வகுப்பறையில் நோட்டு புத்தகங்களை கிழித்தெறிய கூடாது.
  • மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் போது காப்பு, கம்பல், செயின், கயிறு, போன்ற ஆபரணங்கள் ஏதும் அணிய கூடாது.
  • மாணவர்கள் பி.டி வகுப்பின் போது பள்ளி வளாகத்துக்குள்ளேயே விளையாட வேண்டும் வெளியே செல்லுதல் கூடாது.
  • ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது மாணவர்கள் வகுப்பறையை விட்டு வெளியில் செல்லக்கூடாது..

நன்னெறிப்பண்புகள்:-

பள்ளி மாணவ மாணவியர்களிடம்

  • நீதி நெறிக்கதைகள்.
  • தெனாலிராமன் கதைகள்.
  • காப்பிய கதைகள்.
  • நாட்டுப்பற்றை ஊட்டும் சுதந்திர போராட்ட வீரர்களின் கதைகளை எடுத்துரைக்க வேண்டும்.
  • சுத்தம் கல்வி தரும்.
  • மாணவர்களிடையே அமைதி கலாச்சாரத்தை ஊக்குவித்தல்.
  • மதிப்புகளை வளர்த்தல், அனுகுமுறைகளும் உத்திகளும் மாணவ மாணவியர்களிடையே ஊக்குவித்தல்.
  • பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே உறவுமுறைகளை மேம்படுத்துதல்.
  • மாணவர்களிடையே சுற்றுசூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
  • மாணவர்களிடையே குடும்ப உறவு முறைகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
  • மாதம் தோறும் ஓர் தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    அதன் விவரம்...
  • ஜூலை - நேரம் தவறாமை.
  • ஆகஸ்ட் - நாட்டுப்பற்று.
  • செப்டம்பர் - தூய்மை.
  • அக்டோபர் - வாய்மை.
  • நவம்பர் - இறையுணர்வு.
  • டிசம்பர் - ஈகைப்பண்பு.
  • ஜனவரி - விடா முயற்சி.
  • பிப்ரவரி - துணிவுடைமை.
  • மார்ச் - பணிவுடைமை.
  • ஏப்ரல் - நேர்மை.

    ஆகியவற்றை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கலைப்பயிற்சி அளிக்க இந்தி பேசுபவர்கள் அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.