ETV Bharat / state

வேலூரில் இந்திய மாதர் தேசிய சம்மேளத்தினர் ஆர்ப்பாட்டம்!

வேலூர்: கோவிட்-19 தாக்கத்தை குறைப்பதற்காக பிரதமர் அமைத்த பணிக்குழுவில் 50 விழுக்காடு பெண்களை சேர்க்க வேண்டும் உள்ளிட்ட 44 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாதர் தேசிய சம்மேளத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

protest
protest
author img

By

Published : Aug 28, 2020, 8:21 PM IST

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இந்திய மாதர் தேசிய சம்மேளத்தினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் லதா தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, வேலூரில் பாலியல் ரீதியாக எத்தனை பாதிப்புகளை கரோனா தொற்று உருவாக்கி வருகிறது என்பதை ஆய்வு செய்யவும், பெண்கள் மீதான தாக்கத்தை தீர்க்கும் வகையில் கொள்கை, திட்டங்களை வகுக்க வேண்டும், அதேபோல் கோவிட் -19 தாக்கத்தை குறைப்பதற்கான பிரதமர் நரேந்திர மோடி அமைத்த பணிக்குழுவில் 50 விழுக்காடு பெண் உறுப்பினர்கள் இருக்கும்படி சீரமைக்க வேண்டும்.

வேலூரில் மாணவி விக்னேஷ்வரி பாலியல் தொல்லைக்கு ஆளாகி தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட 44 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: குப்பை கிடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நூதன போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.