ETV Bharat / state

வணிகர்களின் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு! - வேலூர் மாவட்ட வணிகர்களின் கருப்பு கொடி ஆர்பாட்டம்

வேலூர்: ஜூலை 9ஆம் தேதி நடைபெற இருந்த வேலூர் மாவட்ட வணிகர்களின் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

VANIGAR SANGAM, POSTPONED BLACK FLAG PROTEST
VANIGAR SANGAM POSTPONED BLACK FLAG PROTEST
author img

By

Published : Jul 8, 2020, 10:20 AM IST

வேலூரின் முக்கிய வணிக பகுதிகளான நேதாஜி மார்கெட், மண்டிதெரு, லாங்கு பஜார் ஆகிய இடங்களில் உள்ள சுமார் 2000 கடைகள் ஊரடங்கு காலம் தொடங்கியதில் இருந்து அவ்வப்போது மூடப்பட்டன.

அதன்படி கடந்த 15 நாட்களாக தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால், வணிகர்கள், 5000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனால், கடைகளை திறக்க அனுமதிக்கக் கோரி மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 9ஆம் தேதி கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது லாங்கு பஜாரை மட்டும் ஒருநாள் வலது புறமும், ஒருநாள் இடது புறமும் திறக்க அனுமதி அளித்த நிலையில், நேதாஜி மார்கெட், மண்டி தெருவை திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என ஆட்சியர் கூறினார். இதையடுத்து நாளை (ஜூலை 9) நடக்கயிருந்த வணிகர்களின் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாக வேலூர் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தாசில்தார் கைது விவகாரத்தில் விதிமீறல்: நான்கு காவல்துறையினர் மீது நடவடிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.