திமிரி அடுத்த புங்கனூர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் விவசாயிகள் விஜயன், உஷா, பிரகாஷ், ஜெயலட்சுமி, சக்திவேலு, ராமமூர்த்தி ஆகியோர் பல்வேறு காரணங்களுக்காக வெளியூர் சென்றுள்ளனர்.
இந்நிலையில், அடுத்தடுத்து இந்த ஆறு பேரின் வீடுகளிலும் பூட்டை உடைத்து அடையளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் விஜயன் வீட்டில் 20 சவரன் தங்க நகைகளும், உஷா வீட்டில் 15 ஆயிரம் ரொக்கப் பணமும், பிரகாஷ் வீட்டில் 5 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் பணம் என மொத்தம் 5 லட்சத்து 17 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் 20 சவரன் தங்க நகைகளையும் அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து திமிரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே, வாணியம்பாடி ஆம்பூர் பகுதிகளில் தொடர் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது திமிரி பகுதியில் ஒரே இரவில் அடுத்தடுத்து ஆறு வீடுகளில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.