திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா இரண்டாம் நாளில் சுவாமி ஜெயந்திநாதர் தங்க தேரில் பவனி வந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரையில் அமைந்துள்ளதால் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகவும் திகழ்கிறது. இந்த கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நவம்பர் 2ம் தேதியன்று யாகசாலை பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது.
கந்த சஷ்டி திருவிழா 7 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். கோவிலில் தினமும் மாலை வேளையில் சுவாமி ஜெயந்திநாதர் தங்கதேர் ரத பவனி கிரி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். தற்போது கந்த சஷ்டி திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று தங்கதேர் ரத பவனி கிரி உலா நடைபெற்றது. சுவாமி ஜெயந்திநாதர் தங்கத்தேர் லதா பவணியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தங்கதேர் ரத வடம் பிடித்து இழுத்து அரோகரா கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 6-ஆம் திருநாள், 7-ஆம் தேதி கோவில் கடற்கரையில் நடைபெற உள்ள சூரசம்ஹாரம் நிகழ்வில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.