திருப்பத்தூர்: வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான, காவலூர், ஆலங்காயம், அம்பலூர், ஆலங்காயம், திம்மாம்பேட்டை, நாட்றம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்தன. இதனையடுத்து இரவு நேர ரோந்து பணிகளை தீவிரப்படுத்திய போலீசார், வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வந்தனர்.
அதன்படி இன்று (திங்கள்கிழமை) அம்பூர்பேட்டை பகுதியில் வாகன தணிக்கையில் ஈட்டுப்பட்டிருந்த போது, அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது முன்னுக்கு பின்னாக இருவரும் பதிலளித்துள்ளார்.
இதையும் படிங்க: "குற்றவாளிகளை பிடிக்க போகல" பெண் காவலர்கள் உயிரிழந்த விவகாரத்தில் ஆணையர் விளக்கம்!
இதனையடுத்து இருவரையும் காவல்நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் மேல்குப்பம் பகுதியை சேர்ந்த பிரபு மற்றும் மாதகடப்பா பகுதியை சேர்ந்த திருப்பதி என்பது தெரியவந்தது. இவர்கள்தான் வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடி சென்று அதை ஆந்திர மாநிலத்தில் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த வாணியம்பாடி நகர போலீசார், அவர்களிடம் இருந்து 14 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.