வானில் ஏற்படும் அற்புத நிகழ்வாகக் கருதப்படும் வளைய சூரிய கிரகணம், இன்று காலை ஏற்பட்டது. இதை தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மக்கள் கண்டு ரசித்தனர்.
ஆனால், வேலூரில் கிரகணத்தின் நிழல் சரியாக பூமியில் படாததால் ஆண்களுக்குப் பாதிப்பு என்ற நம்பிக்கையால், பரிகாரமாக ஒவ்வொரு வீட்டிற்கும் முன்பாகவும் அந்த வீட்டில் எத்தனை ஆண்கள் உள்ளனரோ அத்தனை விளக்குகளைப் பெண்கள் ஏற்றிவைத்தனர்.
இதையும் படிங்க: சூரிய கிரகண நிகழ்வு: பல்வேறு மாவட்ட மக்கள் ரசித்தனர்!