வேலூர்: 2022ஆம் ஆண்டிற்கான கடைசி சூரிய கிரகணத்தை வேலூர் மாணவர்களுடன் பொதுமக்கள் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் நேற்று (அக்.25) கண்டுகளித்தனர். அறிவியல் மையத்தின் மாடியில் வைக்கப்பட்டிருந்த தொலைக்கி மற்றும் சிறப்பு கண்ணாடிகள் மூலம் அனைவரும் சூரிய கிரகணத்தை கண்டு ரசித்தனர்.
வேலூரில் மாலை 5.15 மணி முதல் சுமார் 45 நிமிடம் வரை சூரிய கிரகணம் நீடித்தது. அதற்கு முன் 2020ஆம் ஆண்டு சூரிய கிரகணம் தோன்றியுள்ளது. இதற்கு அடுத்து 5 ஆண்டுக்கு பிறகு 2027ஆம் ஆண்டு மாலை 4.00 மணிக்கு மீண்டும் சூரிய கிரகணம் தெரியும் என்று அறிவியல் மைய்ய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சூரிய கிரகணம்: ஆட்டுக்கல்லில் உலக்கை வைத்து அறிந்துகொள்ளும் கிராமம்