ETV Bharat / state

வேலூர் தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவு!

author img

By

Published : Aug 3, 2019, 4:45 PM IST

வேலூர்: மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை ஆறு மணியுடன் நிறைவடையும் என்றும், வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருக்கும் அரசியல் கட்சியினர் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார்.

vellore

வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தல் பணப்பட்டுவாடா புகார் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் ரத்து செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டு வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி (நாளை மறுநாள்) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகியவை போட்டியிடாமல் விலகியுள்ளது. இதனால் அதிமுக, திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் மட்டும் களத்தில் இருப்பதால் மும்முனை போட்டி நிலவுகிறது. அதிமுக சார்பில் கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம், திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தல்

திமுகவைப் பொறுத்தவரை கடந்த மக்களவைத் தேர்தலில் 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் 38ஆவதாக வேலூர் தொகுதியையும் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறது. அதிமுக ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளதால் வேலூர் தொகுதியைக் கைப்பற்றி தங்கள் கட்சி சார்பில் இரண்டாவது மக்களவை உறுப்பினரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது. நாம் தமிழர் கட்சி அதிகளவில் வாக்குகள் பெற்றுள்ளதால் புது உத்வேகத்துடன் இந்த முறை தேர்தல் களத்தை சந்திக்கிறது.

மேலும், நாளை மறுநாள் காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் 48 மணி நேரத்திற்கு முன்பாக அதாவது இன்று மாலை ஆறு மணியுடன் தேர்தல் பரப்புரை ஓய்வதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார். பரப்புரை முடிந்தவுடன் வெளி மாவட்டங்களில் இருந்து வந்துள்ள அரசியல் கட்சியினர் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

Intro:வேலூர் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது... வெளியாட்கள் வெளியேற மாவட்ட ஆட்சியர் உத்தரவுBody:வேலூர் மக்களவைத் தேர்தல் பணப்பட்டுவாடா புகார் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் ரத்து செய்யப்பட்டது பின்னர் தற்போது மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டு வரும் ஐந்தாம் தேதி(நாளை மறுநாள்) வேலூர் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரை செய்து வருகின்றனர். குறிப்பாக இந்த முறை தேர்தலில் அமமுக மக்கள் நீதி மய்யம் ஆகியவை போட்டியிடாமல் விலகியுள்ளது இதனால் அதிமுக திமுக நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் மட்டும் களத்தில் இருப்பதால் மும்முனை போட்டி நிலவுகிறது அதிமுக சார்பில் கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர் திமுகவைப் பொறுத்தவரை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் 38வதாக வேலூர் தொகுதியையும் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது இதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் வேலூர் தொகுதியில் முகாமிட்டு சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார் அதன்படி சாலையில் அணிந்தபடி மக்களிடம் வாக்கு சேகரிக்த்தும் ஆங்காங்கே வியாபாரிகளிடம் ஆலோசனை நடத்தியும் வாக்கு சேகரிக்கிறார் இதேபோல் வேன் பிரச்சாரம் மூலமும் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார் அதிமுகவும் கடந்த முறை ஒரே ஒரு தொகுதியில் மட்டும் பெற்றுள்ளதால் வேலூர் தொகுதியை கைப்பற்றி தங்கள் கட்சி சார்பில் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது இதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அனைத்து அமைச்சர்களும் வேலூரில் முகாமிட்டு தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி அதிகளவில் வாக்குகள் பெற்றுள்ளதால் புது உத்வேகத்துடன் இந்த முறை தேர்தல் களத்தை சந்திக்கிறது இந்த நிலையில் வேலூரில் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. நாளை மறுநாள் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் 48 மணி நேரத்திற்கு முன்பாக அதாவது இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்வதாக மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சண்முகசுந்தரம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் மேலும் பிரச்சாரம் முடிந்தவுடன் வெளி மாவட்டங்களில் இருந்து வந்துள்ள அரசியல் கட்சியினர் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார் இதனால் வேலூர் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.