ETV Bharat / state

ஸ்டாலின் மகனுக்கு ஏன் அவசர பட்டாபிஷேகம்? -எடப்பாடி பழனிசாமி கேள்வி - தேர்தல் பரப்புரை

வேலூர்: திமுகவில் வாரிசு அரசியல் நடைபெறுகிறது என்றும், ஸ்டாலின் மகனுக்கு எதற்கு அவசரமாக பட்டாபிஷேகம் வழங்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
author img

By

Published : Jul 28, 2019, 11:24 PM IST

வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கே.வி.குப்பம் பேருந்து நிலையத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஸ்டாலின் கூறியது போல் சதி செய்து நாங்கள் தேர்தலை நிறத்தவில்லை. நீங்கள் வாக்காளர்களுக்கு மூட்டை மூட்டையாக பணம் கொடுக்க முயன்றதால் தான் தேர்தலை நிறுத்தினோம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ஸ்டாலின் பச்சை பொய் பேசுகிறார். தேர்தல் தள்ளி போக முழுக்க முழுக்க திமுக தான் காரணம் என்று உண்மை அறிந்து பேச வேண்டும். கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததற்கு சட்டசபையில் திமுக எம்எல்ஏக்கள் நடனம் ஆடுகின்றனர். இவர்கள் எல்லாம் நாட்டை ஆள வேண்டுமா? ஒருகாலமும் அதிமுகவை வீழ்த்த முடியாது. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சபாநாயகரை இருக்கையை விட்டு இழுத்து அவமானப்படுத்தினார்கள். நீங்களா நாடாள தகுதி படைத்தவர்கள்? என கடுமையாக விமர்சித்து பேசினார்.

முதலமைச்சர் பழனிசாமி

மேலும், ஆசைவார்த்தை காட்டி அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேரை பிரித்து வெளியே கொண்டு போனீர்கள். நீங்கள் நினைத்தது நடந்ததா?அத்தனை முயற்சியிலும் தோற்றுபோனீர்கள். அதிமுக தொண்டனை கூட நீங்கள் தொட்டு பார்க்க முடியாது. சாதாரண தொண்டன் கூட முதலமைச்சர் ஆக முடியும். திமுகவில் வாரிசு தான் போட்டியிடுகிறது. ஸ்டாலின் மகனுக்கு எதற்கு அவசரமாக பட்டாபிஷேகம் என கேள்வி எழுப்பினார்.

Intro:Body:வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஏசி சண்முத்தை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வேலூர் அடுத்த கே.வி.குப்பம் பேருந்து நிலையம் அருகில் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினார் அப்போது அவர் பேசுகையில்

திமுகவால் நிறுத்தப்பட்ட தேர்தல் வேலூர் தேர்தல். ஸ்டாலின் கூறியதுபோல் சதி செய்து நாங்கள் தேர்தலை நிறுத்தவில்லை நீங்கள் வாக்காளர்களர்களுக்கு பணம் கொடுக்க மூட்டை மூட்டையாக பணத்தை கண்டு பிடித்ததால் வேலூர் தேர்தல் நிறுத்தப்பட்டது. ஸ்டாலின் பச்சை பொய் பேசுகிறார் தேர்தல் தள்ளி போக முழுக்க முழுக்க திமுக தான் காரணம்ஸ்டாலின் உண்மை அறிந்து பேச வேண்டும். வழக்கு நிலுவையில் உள்ளது உங்களுடன் கூட்டு வைத்த காரணத்தால் தான் கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்த்து
சட்டசபையில் திமுக எம எல்ஏக்கள் நடனம் ஆடுகின்றனர். இவர்கள் எல்லாம் நாட்டை ஆள வேண்டுமா? ஒருகாலமும் அதிமுகவை வீழ்த்த முடியாது ஆட்சியை கவிழ்க்க முடியாது, கட்சியை உடைக்க முடியாது தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சபாநாயகரை இருக்கையை விட்டு இழுத்து அவமானப்படுத்தினார்கள். நீங்களா நாடாள தகுதி படைத்தவர்கள்?
ஆசைவார்த்தை காட்டி அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேரை பிரித்து வெளியே கொண்டு போனீர்கள். நீங்கள் நினைத்தது நடந்த்தா?
அத்தனை முயற்சியிலும் தோற்று போனீர்கள். அதிமுக தொண்டனை கூட நீங்கள் தொட்டு பார்க்க முடியாது
சாதாரண தொண்டன் கூட முதல்வர் கூட அதிமுகவில் முதல்வர் அமைச்சர் ஆக முடியும்
இங்கே வாரிசு தான் போட்டியிடுகிறது. தற்போது ஸ்டாலினின் மகனுக்கு பதவி. நாட்டில் பல தலைவர்கள் இருக்கும்போது ஏன் தனது வாரிசுக்கு பட்டாபிஷேகம் செய்ய துடிக்கிறார்? விவசாயி கடனை தள்ளுபடி செய்வேன் என்று ஸ்டாலின் சொல்கிறார் இது என்ன சட்டமன்ற தேர்தலா? எனவே பொய்யான வாக்குறுதியை கொடுத்து வெற்றி பெற்றார். நேற்று கூட 9 பெரிதா? 13 பெரிதா? என்கிறார். 9 தான் பெரிது. ஏனென்றால் நியாயத்தின் வழியில் நாங்கள் வெற்றி பெற்றோம் திமுகவினர் விஞ்ஞான மூளை படைத்தவர். இங்கிருந்து சென்ற ஒருவர் கிரிமினல் அவர் அறிவுரைப்படி 5 சவரனுக்கு மேல் நகைக்கடன் இருந்தால் தள்ளுபடி என்றார். அதுவும் பொய். இப்போ மேலேயும் ஆட்சியில் இல்லை, கீழேயும் இல்லை. இப்போது எதை சொல்லி வாக்கு கேட்பார்

தமிழகத்தில் நீர் மேலாண்மை திட்டத்தை நிறைவேற்ற ஐந்து ஓய்வுபெற்ற பொறியாளர்கள் நியமிக்கப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்றுவருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார் வேலூர் மக்களவைத் தொகுதி

தமிழகத்தில் தடுப்பணைகள் கட்ட ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அதில் 600 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார் மேலும் விவசாயிகளின் ஒத்துழைப்புடன் குடி மராமத்து பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது தற்போது 500 கோடி ரூபாய் மதிப்பில் 1829 ஏரி குளங்கள் தூர் வாரப்பட இருப்பதாக தெரிவித்தார் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
ஏழை எளிய மக்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் 100 நாள் வேலை திட்டம் தொடர்ந்து நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என கூறினார் விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளர்களையும் இரு கண்களாக நினைத்து தமிழக அரசு அவர்களுக்கு தேவையான திட்டங்களை நடைமுறைப் படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார் கிராமத்தில் வாழும் மக்கள் பொருளாதாரத்தில் மேம்பட கோழி குஞ்சு வளர்ப்பு கறவை மாடு வளர்ப்பு ஆடு வளர்ப்பு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பு திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அதை செயல்படுத்தி வருவதாகவும் கூறினார் தமிழக அரசு கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது மாணவர்கள் விஞ்ஞானக் கல்வி பெற வேண்டும் என்பதற்காக இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது இதுவரை 43 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது இதற்காக 6 ஆயிரத்து 220 கோடி ரூபாய் செலவிடப்பட்டு இருப்பதாகவும் கூறினார். உணவு தானிய உற்பத்தியில்
தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார் அதற்காக தமிழக அரசின் விருதையும் பெற்றுள்ளதாக தெரிவித்தார் சொட்டு நீர் பாசனத்திற்காக இரண்டாயிரத்து 34 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார் தமிழகத்தில் தமிழ் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார் விரைவில் வேலூர் மாவட்டம் கே வி குப்பம் பகுதியை புதிய தாலுக்காவாக அறிவிக்கப்படும் கவுன்டன்யா நதியின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கப்படும் வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டம் அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்க வழிவகை செய்யப்படும் என அவர் பேசினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.