ETV Bharat / state

சதுரங்கவேட்டை பட பாணியில் மக்களை ஏமாற்றிய ஸ்டாலின்! - parlement election

வேலூர்: திமுகவினர் ஒழுங்காக இருந்தாலே தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கும் என்றும் சதுரங்க வேட்டை பட பாணியில் ஸ்டாலின் மக்களிடம் ஆசையை தூண்டி வெற்றி பெற்றுள்ளார் என்று முதலமைச்சர் பழனிசாமி கடுமையாக விமர்சித்து பேசினார்.

cm palaniswamy
author img

By

Published : Aug 3, 2019, 12:29 AM IST

வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏசி சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று இறுதிக்கட்ட பரப்புரையை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஸ்டாலின் எத்தனை குட்டி கரணம் அடித்தாலும் அதிமுக ஆட்சியை கலைக்க முடியாது. எங்கள் ஆட்சியை கவிழ்க்க நினைத்தால் நீங்கள் எப்போதும் சட்டையை கிழித்து கொண்டு தான் திரிய வேண்டும் என விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சட்டம் இயற்றுகின்ற சட்டமன்றத்தில் திமுகவினர் ஜெயலலிதாவை அவமானப்படுத்தினார்கள். சட்டம் ஒழுங்கை பற்றி பேச திமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது? கட்டப்பஞ்சாயத்து செய்ய முயலும் ஸ்டாலின், கட்சித் தலைவரா? கட்டப்பஞ்சாயத்து தலைவரா? திருநெல்வேலியில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்டார். அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் திருநெல்வேலி சென்று அஞ்சலி செலுத்தி விட்டு, சட்டம் ஒருங்கு சரியில்லை என்கிறார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அடுத்த இரண்டே நாளில் அந்த வழக்கில் திமுக பிரமுகர் கைது செய்யப்படார். இதற்கு யார் காரணம். திமுகவின் உள்கட்சி பூசல் தலைவிரித்தாடுகிறது. விஞ்ஞான மூளை படைத்த திமுக பொய்யான வாக்குறுதிகள் கொடுத்ததும் அதை நம்பி ஓட்டு போட்டு விட்டனர். சதுரங்கவேட்டை பட பாணியில் ஸ்டாலின் மக்களிடம் ஆசையை தூண்டி ஏமாற்றி விட்டார் என்றும் அவர் கூறினார்.

Intro:திமுகவினர் ஒழுங்காக இருந்தாலே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கும - சதுரங்க பட பாணியில் ஸ்டாலின் மக்களிடம் ஆசையை தூண்டி வெற்றி பெற்றுள்ளார் - வேலூர் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரையில் முதல் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
Body:வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏசி சண்முகத்தை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறார் கடந்த முறை போல் இல்லாமல் இந்த முறை முதலில் எடப்பாடி பழனிச்சாமி வேன் பிரச்சாரத்தை தவிர்த்து பொதுக் கூட்டங்களை நடத்தி அதன்மூலம் வாக்கு சேகரித்து வருகிறார் அதன்படி வேலூர் மக்களவை தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரு கூட்டங்களை நடத்தி வந்தார் அதன்படி இன்று இறுதியாக வேலூர் சட்டமன்ற தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இறுதிகட்ட பரப்புரையை மேற்கொண்டார் அப்போது அவர் பேசுகையில் , "ஸ்டாலின் கடந்த 5 நாளில் வேலூர் முழுவதும் பேசுகையில், மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து தேர்தலை ரத்து செய்த்தாக பொய்யான செய்தியை சொல்லி வருகிறார். திமுக வேட்பாளருக்கு நெருக்கமான ஒருவர் வீட்டில் கட்டு கட்டாக பணம் எடுக்கப்பட்டதால் தான் வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. ஸ்டாலின் எத்தனை குட்டி கரணம் அடித்தாலும் அதிமுக ஆட்சியை கலைக்க முடியாது. ஊழல் செய்த்தால் கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி தான். திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் கோடி கோடியாக சம்பாதித்து தற்போது தேர்தலுக்கு செலவு செய்கிறார்கள். ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் எத்தனை சதி செய்தார். சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த போது திமுக என்ன ஆட்டம் ஆடினார்கள் என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் ஆட்சியை கவிழ்க்க நினைத்தால் நீங்கள் எப்போதும் சட்டையை கிழித்து கொண்டு தான் திரிய வேண்டும். சட்டம் இயற்றுகின்ற சட்டமன்றத்தில் திமுகவினர் ஜெயலலிதாவை அவமானப்படுத்தினார்கள். எனவே சட்டம் ஒழுங்கை பற்றி பேச திமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது? ஸ்டாலின் எத்தனையோ நாடகம் ஆடினார். ஆனாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இன்று எங்கள் தயவில் தான் ஆட்சி நடப்பதாக ஸ்டாலின் கூறுகிறார். உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவையில்லை. எல்லாம் செய்துவிட்டு எதுவுமே செய்யவில்லை என ஸ்டாலின் பச்சை பொய் சொல்கிறார். 18 எம்எல்ஏக்களிடம் ஆசை காட்டி தற்போது அந்த 18 பேரும் வீதியில் இருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கு இந்திய அளவில் தமிழகத்தில் தான் சிறப்பாக உள்ளது. சென்னையில் ஓசி பிரியாணி. திமுகவினர் எல்லா கடைக்கும் சென்று சாப்பிடுவார்கள். ஆனால் காசு கொடுக்க மாட்டார்கள். அடுத்த நாளே ஸ்டாலின் கட்டப்பஞ்சாயத்து செய்ய போகிறார். இவர் கட்சித் தலைவரா? கட்டப்பஞ்சாயத்து தலைவரா? திமுகவினர் ஒழுங்காக இருந்தாலே சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பார்கள். பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். திமுகவினர் பேசுவது அனைத்தும் பச்சைப் பொய். ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வந்த்து திமுக தான். சட்டம் ஒழுங்கு சீர்குலைய காரணமே திமுக தான். திருநெல்வேலியில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்டார். அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் திருநெல்வேலி சென்று அஞ்சலி செலுத்தி விட்டு, சட்டம் ஒருங்கு சரியில்லை என்று பேட்டி கொடுத்தார். அடுத்த இரண்டே நாளில் அந்த வழக்கில் திமுக பிரமுகர் கைது செய்யப்படார். இதற்கு யார் காரணம். திமுகவின் உள்கட்சி பூசல் தலைவிரித்தாடுகிறது. 7 பேர் விடுதலையில் அதிமுக தான் முழு முயற்சி எடுத்து வருகிறது. ஸ்டாலின் தொழில் துறை அமைச்சராக இருந்தபோது தான் ஸ்டெர்லைட் ஆலைக்கு விரிவாக்கம் செய்ய நிலம் கொடுத்தார். ஸ்டாலின் 4 பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து கடந்த தேர்தலில் வெற்றி பெற்றார். விஞ்ஞான மூளை படைத்த திமுக பொய்யான வாக்குறுதிகள் கொடுத்ததும் அதை நம்பி ஓட்டு போட்டு விட்டனர். சினிமாவில் சதுரங்க பட பாணியில் ஸ்டாலின் மக்களிடம் ஆசையை தூண்டி ஏமாற்றி விட்டார்" என்று பேசினார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.