வேலூர் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது சிப்பாய் புரட்சிதான். இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதல் விதையாக 1806ஆம் நடந்த சிப்பாய் புரட்சி கூறப்படுகிறது.
வேலூர் சிப்பாய் புரட்சி
இந்த ஆண்டோடு சிப்பாய் புரட்சி நடந்து 215ஆவது ஆண்டுகள் ஆகின்றன. இதை நினைவுகூரும் விதமாகவும், அதன் வரலாற்றை மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையிலும் வேலூர் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, சிப்பாய் புரட்சிக்கான காரணம் தொடங்கி அது முடிவுக்கு வந்தது வரையிலான 10 முக்கிய ஓவியங்கள் டிஜிட்டல் பதிவாக மாற்றி கண்காட்சியில் பேனர்களாக வைக்கப்படவுள்ளன.
வரலாற்றை விளக்கும் கண்காட்சி
சிறப்பு ஏற்பாடுகள் குறித்து அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன், "சிப்பாய் புரட்சியை மக்கள் எளிதில் புரிந்துகொள்ள, கலைநயத்துடன் அந்தச் சம்பவங்களை ஓவியங்களாக மாற்றி காட்சிப்படுத்தவுள்ளோம். கோயம்புத்தூரைச் சேர்ந்த ஓவியர் ரவிராஜ், சிப்பாய் புரட்சி வரலாற்றிற்கு வண்ணங்களால் உயிர் கொடுத்துள்ளார்.
இதைப் பார்த்தாலே மக்களுக்கு சிப்பாய் புரட்சியின் வீரியம் புரியும். நாளை (ஜூலை 1) தொடங்கி ஜூலை 11 வரை இந்த பேனர்கள் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன" என்றார்.
இதையும் படிங்க: பெயரில் தொடங்கி சிப்பாய் கலகம் வரை... வேலூருக்கும் திப்பு சுல்தானுக்குமான தொடர்பு!