ETV Bharat / state

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு: நீரில் அடித்து செல்லப்பட்ட வீடு! - பாலாற்றில் வெள்ளப்பெருக்கு

வேலூர்: குடியாத்தம் அருகே பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக கரையோரம் இருந்த வீடு ஒன்று நீரில் அடித்து செல்லப்பட்டது.

v
v
author img

By

Published : Nov 19, 2021, 4:50 PM IST

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பசுமாத்தூர் கிராமத்தில் பாலாறு நகர் பகுதியில் வழக்கறிஞர் இளங்கோ என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. வேலூர் மாவட்டத்தில் பெய்து வந்த தொடர் கனமழையின் காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் பாதுகாப்பு கருதி பாலாறு கரையோரப்பகுதியில் இருந்தவர்கள் வேறு இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அப்படி இளங்கோவும் அவரது குடும்பத்தினரும் பாதுகாப்பான இடத்தில் தங்கினர்.

நீரில் அடித்து செல்லப்பட்ட வீடு

இந்நிலையில், இன்று (நவ.19) பிற்பகல் 2.30 மணி அளவில் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இளங்கோவின் ஒட்டுமொத்த வீடும் நீரில் அடித்து செல்லப்பட்டது. நல் வாய்ப்பாக வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

இதையும் படிங்க: Vellore House Collapse: வீடு இடிந்து 9 பேர் உயிரிழந்த பரிதாபம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.