தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக மாநிலம் முழுவதும் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக நேற்று முன்தினம் இரவு முதல் விடியவிடிய கனமழை கொட்டித் தீர்த்தது அவ்வப்போது விட்டுவிட்டு லேசான மழையும் சில நேரங்களில் கனமழையும் பெய்துவந்தது.
சத்துவாச்சாரி, காட்பாடி உள்பட பல்வேறு பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது இதனால் பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஐஸ் ஸ்கேட்டிங் திருவிழாவில் சறுக்கி விளையாடும் மக்களின் க்யூட் புகைப்படங்கள்!