ETV Bharat / state

இறந்தவர்களின் ஆவியை வீட்டிற்கு அழைத்து வரும் வினோத விழா

ஊசூர் அருகே குருமலையில் அம்மன் கோயில் திருவிழாவில் இறந்தவர்களின் ஆவியை வீட்டிற்கு அழைத்து வரும் வினோத நிகழ்வை மலைவாழ்மக்கள் நடத்தினர்.

ஆவியை வீட்டிற்கு அழைத்து வரும் வினோத விழா

author img

By

Published : May 25, 2022, 3:31 PM IST

வேலூர்: அணைக்கட்டு தாலுகா ஊசூர் அடுத்த அத்தியூர் ஊராட்சியிலுள்ள குருமலை, நச்சிமேடு, வெள்ளக்கல்மலை, பள்ளகொல்லைமலை உள்ளிட்ட மலை கிராமங்களைச் சேர்ந்த மலை வாழ்மக்கள் ஆண்டுத் தோறும் மலையிலுள்ள செல்லியம்மன், தஞ்சியம்மனுக்கு திருவிழா நடத்துகின்றனர்.

எப்போது திருவிழா நடத்தினாலும் அதற்கு முன்பு குறிகேட்டு கடந்தாண்டு விழா நடத்திய பிறகு ஓராண்டில் மலையில் இறந்தவர்கள் மற்றும் வெளியூருக்கு சென்று இறந்தவர்களின் ஆவியை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டு விழா நடத்துவது வழக்கம்.

அதன்படி, இந்தாண்டு விழா நடத்த மலையில் ஆண்கள், பெண்கள் என அனைவரும் திரண்டு கோயில் அருகே பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து, இரவு குறிகேட்டு நேற்று (மே 24) மாலை பெண்கள் கும்மியடித்தும், தெய்வங்கள் வந்தபடி ஆடிப்பாடியும் இறந்தவர்களது ஆவியை கூவிக்கூவி அழைத்தனர்.

தொடர்ந்து, மலைவாழ் மக்களில் இறந்தவர்களின் ஆவியை மலையின் நுழைவு வாயிலில் இருந்து மேளதாளத்துடன் கரகம், சீர்வரிசை பொருள்களுடன் ஊர்வலமாக அழைத்து வந்து அவர்கள் இறப்பதற்கு முன்பு வசித்த வீடுகளில் விட்டு சென்றனர்.

ஆவியை வீட்டிற்கு அழைத்து வரும் வினோத விழா

அவர்கள் குடும்பத்தினர் ஆனந்த கண்ணீருடன் அவர்களை வரவேற்றனர். இதையடுத்து, மலையிலே ஆடுகள், கோழிகள் பலியிடப்பட்டு சிறப்பு விருந்துகள் அனைவருக்கும் பரிமாறப்பட்டது. தொடர்ந்து, விழாவானது மீண்டும் குறிகேட்கபட்டு அது உத்தரவு தரும் வாரங்களில் திருவிழா நடத்தப்படுகிறது.

குருமலையில் ஆண்டுத்தோறும் மலைவாழ் மக்கள் அம்மன் கோயில் திருவிழா நடத்துவதற்கு முன்பாக ஓராண்டில் இறந்தவர்களின் ஆவியை வீட்டுக்கு அழைத்து வந்து குறிகேட்டு விழா நடத்தி வரும் வினோத நிகழ்வு சுவாரசியத்தையும் தொன்றுதொட்டு நடந்துவரும் பழக்க வழக்கங்களையும் மாறாமல் வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: திருத்தணி கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி மறுப்பு - உள்ளூர் பக்தர்கள் வாக்குவாதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.