ETV Bharat / state

காட்பாடியில் முகமூடி கொள்ளை - ஆசிரியர் வீட்டில் கைவரிசை! - vellore district news

காட்பாடியில் ஏழு பேர் கொண்ட முகமூடி கொள்ளை கும்பல் ஆசிரியரின் கழுத்தில் கத்தியை வைத்து ஆறு சவரன் தங்க நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

vellore-gang-robbery
vellore-gang-robbery
author img

By

Published : Aug 3, 2021, 10:35 AM IST

வேலூர்: காட்பாடியில் உள்ள ராமதாஸ் நகர் பகுதியில் வசித்துவருபவர் மனோகரன். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவரின் மனைவி, இரண்டு குழந்தைகளுடன் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்து வீட்டின் கதவை தட்டியுள்ளனர்.

மனோகரன் கதவை திறந்தபோது முகமூடி அணிந்த நபர்கள் மனோகரன் கழுத்தில் கத்தியை வைத்து கழுத்திலிருந்து 6 சவரன் செயின், மோதிரம் போன்றவற்றை பறித்து மேலும் வீட்டில் உள்ள நகைகளை கேட்டனர். அப்போது மனோகரின் மனைவி, குழந்தைகள் கூச்சலிட்டதால் அதிர்ச்சியடைந்த கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து காட்பாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். கடந்த ஓராண்டுக்கு பிறகு மீண்டும் காட்பாடி பகுதியில் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து காட்பாடி காவல் துறையினர் இதுகுறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க :ஈரோட்டில் அதிமுக உறுப்பினர் கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.