ETV Bharat / state

மக்களின் அலட்சியம் 500 பேர் கரோனாவால் பாதிக்கப்படலாம் - மாவட்ட ஆட்சியர் வேதனை! - vellore district collector news

வேலூர்: கரோனா வைரஸ் அச்சமின்றி சுற்றித்திரியும் மக்களை பார்க்கும்போது மிகுந்த வேதனை அளிக்கிறது என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

dsd
sds
author img

By

Published : Apr 7, 2020, 4:18 PM IST

உலகை மிரட்டும் கரோனா வைரஸ் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்," பல முறை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியும் மக்கள் அலட்சியமாக உள்ளனர். தினந்தோறும் காய்கறி, மளிகை, மாத்திரை வாங்குவதற்கு வெளியே வருகின்றனர். அதுமட்டுமின்றி சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கும்பலாக வாங்குவது வேதனை அளிக்கிறது.

இந்தச் செயல்களால் மாவட்ட நிர்வாகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பயனற்றவையாக மாற்றிவிடும். இந்த நிலைமை நீடித்தால் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து சுமார் 500 பேர் கரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால், அரசு மருத்துவமனையில் 125 செயற்கை சுவாச கருவிகள் (வென்ட்டிலேட்டர்) மட்டுமே உள்ளதால், சிகிச்சை அளிப்பதில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.

வேலூர் மாவட்டம் முழுவதும் 1,552 தன்னார்வலர்கள் உள்ளனர். இவர்களை இரண்டு பிரிவாக பிரித்து ஒரு பிரிவினரை காவல் துறைக்கும், இன்னொரு பிரிவினரை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள், கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி கொடுக்க உரிய பாதுகாப்போடு பயன்படுத்த உள்ளோம். எனவே, மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்து தங்களை கரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: இந்தியாவை மிரட்டிய ட்ரம்ப்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.