வேலூர் நாடாளுமன்ற உறுப்பினராக திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். சமீபத்தில் நடைபெற்ற வேலூர் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு கதிர் ஆனந்த் இந்த வெற்றியைப் பெற்றார்.
தேர்தல் வாக்குறுதியில், தன்னை சந்தித்து பொதுமக்கள் குறைகளைத் தெரிவிப்பதற்காக வேலூரில் நாடாளுமன்ற அலுவலகம் திறக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார், கதிர் ஆனந்த். அதன்படி தற்போது வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் கதிர் ஆனந்த் தனது அலுவலகத்தை அமைத்துள்ளார். இதற்கான திறப்பு விழாவில் திமுக பொருளாளரும், கதிர் ஆனந்தின் தந்தையுமான துரைமுருகன் கலந்துகொண்டு அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
பொதுவாக இதுபோன்ற சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் தனியார் இடங்களில் அமைக்கப்படும். ஆனால், வேலூரில் அரசுக்குச் சொந்தமான மாநகராட்சி கட்டடத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அலுவலக திறப்பு விழாவில் திமுக தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டனர். இதனால் வேலூர் மாநகராட்சி அலுவலகம், திமுக கட்சி அலுவலகம் போல் காணப்பட்டது.
இதையும் படிங்க: 'திரைப்பட டிக்கெட் விலையை குறைக்க வேண்டும்' - டி.ஆர்.