சென்னையைப் போன்று வேலூர் மாவட்டத்திலும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் 166 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் அம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 126ஆக உயர்ந்துள்ளது. மேலும், மாவட்டத்தில் இதுவரை 768 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: முதலில் ஸ்பானிஷ் ஃப்ளூ, பிறகு கரோனா - இரு பெரும் தொற்றுகளை வீழ்த்திய 106 வயது சாதனை மனிதர்!