வேலூர் மக்களவைத் தேர்தலில் 1553 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் 179 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே அங்கு மத்திய துணை ராணுவப் படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பதற்றமான வாக்குச்சாவடியாக அறிவிக்கப்பட்ட வேலூர் கொணவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார்.
அப்போது அவர் வாக்குச்சாவடி மையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் பொதுமக்கள் யாரும் கூடி நின்று பேச அனுமதிக்கக்கூடாது. வாகனங்களை நிறுத்த அனுமதிக்கக் கூடாது என்று அங்கிருந்த காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.