வேலூர் தனியார் கல்லூரியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா நடத்தப்பட்டது. இதில், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
பல்வேறு வெளிநாட்டு மாணவர்கள் கலந்து கொண்டு தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் குறித்து தெரிந்து கொண்டனர். விழாவில் கல்லூரி மாணவிகளின் பரதநாட்டியம், கரகாட்டம் உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பேசுகையில், ' பெண்கள் கல்யாணம் முடிந்தவுடன் வீட்டில் இருந்து விடக்கூடாது. வேலைக்குச் சென்றால் தான் எதிர்காலத்தில் அவர்கள் சுயமாக நிற்கமுடியும். எனவே, அனைவரும் கட்டாயம் வேலைக்குச் செல்லவேண்டும்.
தமிழ்நாடு அரசுப் பெண்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. குறிப்பாக, சொத்தில் சம உரிமை பெற்று தந்தது, 33 விழுக்காடு இட ஒதுக்கீடு ஆகிய திட்டங்களைக் கொண்டு உள்ளது. இதற்கு முக்கியமாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். அவர் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார்' என்றார்.
இதையும் படிங்க: குழந்தையை வாடகைக்கு எடுத்து பிச்சை எடுத்த ஆந்திரப் பெண் - கையும் களவுமாக பிடித்த வேலூர் ஆட்சியர்