ETV Bharat / state

வேலூர் வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையைத் திறந்துவைத்த ஆட்சியர் - Vellore Collector

ஐந்து கோடியே 77 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கும் வைப்பறையை வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் இன்று திறந்துவைத்தார்.

Vellore  Collector opens voting machine warehouse

author img

By

Published : Dec 4, 2020, 5:56 PM IST

வேலூர்: தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை கட்ட அனுமதி வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் வேலூர் மாவட்டத்தில், ஆட்சியர் அலுவலகத்தினுள் ஐந்து கோடியே 77 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கும் அறை கட்ட கடந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கான கட்டுமான பணிகள் ஒரு மாதத்திற்கு முன்பாகவே முடிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (டிச. 04) வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் திறந்துவைத்தார். இந்த வாக்குப்பதிவு இயந்திரம் வைப்பறையில் ஒன்பதாயிரத்து 320 பேலட் யூனிட், ஐந்தாயிரத்து 40 கண்ட்ரோல் யூனிட் மற்றும் ஐந்தாயிரத்து 40 வாக்குப்பதிவு இயந்திரங்கள் போன்வற்றைப் பாதுகாப்பாக வைக்கும் அளவிற்கு இட வசதியும், 3.9 மீட்டர் உயரமுள்ள வளாகமும் கட்டப்பட்டுள்ளது.

இதில் 16 சிசிடிவி கேமராக்கள், வாக்குப்பதிவு இயந்திரங்களை கீழ்தளத்தில் இருந்து முதல் தளத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் தானியங்கி லிஃப்டுடன் அனைத்துப் பாதுகாப்பு அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், வருவாய் கோட்டாட்சியர் கணேஷ், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ஶ்ரீராம் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: குமரியில் வாக்குப்பதிவு இயந்திரம் திருட்டு : அரசியல் கட்சியினர் புகார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.