வேலூர்: குடியாத்தம் அருகே பேட்டைப்பகுதியில் பலமனேரி நெடுஞ்சாலையில் 1ஆம் வகுப்பு படிக்கும், 6 வயது சிறுவன் நேற்று (ஜூலை 7) தனது சகோதரியுடன் சாலையைக் கடக்க முயன்றுள்ளான்
சாலையின் ஒருபுறம் வாகனம் வருகிறதா எனக் கவனித்த சிறுவன் மற்றொரு புறம் பார்க்காமல் வேகமாக சாலையில் ஓடினான். அப்போது அவ்வழியே ஜல்லி ஏற்றி வந்த மினி டிப்பர் லாரி சிறுவன் மீது மோதியது.
இதைக் கண்டு அங்கிருந்தவர்கள் பதற்றத்துடன் ஓடி சென்று பார்த்தபோது சிறு காயங்களுடன் சிறுவன் லாரிக்கு அடியிலிருந்து மீட்கப்பட்டான். இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க: ரயிலில் சிக்கியவரை மீட்ட பெண் காவலர்கள்: வைரல் வீடியோ!