ETV Bharat / state

வேலூரில் குழந்தை கடத்தல்; 8 மணிநேரத்தில் கூண்டோடு கைது செய்த போலீஸ்! - வேலூர் மாவட்ட செய்திகள் இன்று

vellore baby kidnapping: தாய்க்கு மயக்க மருந்து கொடுத்து குழந்தையை கடத்திய தம்பதியை வேலூர் போலீசார் 8 மணிநேரத்தில் கைது செய்துள்ளனர்.

குற்றவாளிகளை 8 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்

author img

By

Published : Aug 20, 2023, 9:59 PM IST

வேலூர்: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாய்க்கு மயக்க மருந்து கொடுத்து பச்சிளம் ஆண் குழந்தை கடத்திச் செல்லப்பட்டது. கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து குழந்தையை கடத்திச்சென்ற தம்பதியை போலீஸார் 8 மணி நேரத்தில் காஞ்சிபுரத்தில் கைது செய்ததோடு குழந்தையை மீட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலத்தை சேர்ந்தவர் சுந்தர். இவரது மனைவி சூரியகலா(மாற்றுத்திறனாளி). இவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு கண்ணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் கருத்தடை சிகிச்சைக்காக சூரியகலா வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வார்டில் சூரியகலாவுடன் குழந்தையும் இருந்தது. மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் உணவு இடைவேளை தவிர மற்ற நேரத்தில் நோயாளிகளின் உறவினர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. நோயாளிகளுக்கு உதவியாக பெண்கள் ஒருவர் மட்டுமே வார்டில் உடனிருக்க அனுமதிக்கப்படுகின்றனர்.இந்த நிலையில், சனிக்கிழமை மாலை சுமார் 5.30 மணியளவில் சூரியகலா இருந்த வார்டுக்கு ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தை அடுத்த அய்யம்பேட்டைசேரியைச் சேர்ந்த திருநாவுக்கரசு மனைவி பத்மா(30) என்பவர் வந்துள்ளார்.

சூரியகலாவுடன் நெருங்கி பழகுவது போல் நடித்து, அவருக்கு உணவளித்துள்ளார். அந்த உணவை சாப்பிட்ட சூரியகலா சிறிது நேரத்திலேயே மயக்கமடைந்துள்ளார்.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சூரியகலாவின் ஆண் குழந்தையை பத்மா கடத்தி சென்றுவிட்டார். சூரியகலா கண் விழித்து பார்த்தபோது குழந்தை காணாமல் போனதை அறிந்த அவர் கதறி அழுதுள்ளார். இதுகுறித்து வேலூர் கிராமிய காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போலீஸார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

குழத்தையை கடத்தி சென்ற குற்றவாளி
குழத்தையை கடத்தி சென்ற குற்றவாளி

4 தனிப்படைகள் அமைத்த போலிஸ்: இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் உத்தரவின் பேரில் உதவி காவல் கண்காணிப்பாளர் பிரசன்னககுமார் தலைமையில் வேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து தனிப்படை போலீஸார் மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் பத்மா, குழந்தையை கடத்திக்கொண்டு வேகவேகமாக மருத்துவமனையில் இருந்து வெளியே செல்வது பதிவாகி இருந்தது.

இதையடுத்து போலீஸார் கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், குழந்தையுடன் பத்மா திருவண்ணாமலை செல்லும் பேருந்தில் ஏறி தப்பிச்சென்றது தெரிந்தது. பத்மா பயணம் செய்த வழித்தடங்களில் உள்ள (அண்டை மாவட்டங்கள் உள்பட) 500க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிப்பதிவுகளை ஆய்வு செய்து போலீஸார் பின்தொடர்ந்து சென்றனர்.

அதன்படி, கண்காணிப்பு கேமராவின் தொடர்ச்சியை வைத்து இறுதியாக 8 மணி நேரத்தில் காஞ்சிபுரத்தில் பத்மா இருப்பதை கண்டுபிடித்தனர். விரைந்து சென்ற தனிப்படை போலீஸார் பத்மா, அவரது கணவர் திருநாவுக்கரசு ஆகிய இருவரையும் பிடித்து கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து குழந்தையையும் மீட்டனர். மேலும் இந்த குழந்தை கடத்தல் தொடர்பாக கடத்திய பத்மா, அவரது கணவர் ஆகியோரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐந்து மாவட்ட போலீஸாரின் துரித செயல்பாடு: வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய ஐந்து மாவட்ட காவல்துறையினரின் துரிதமாக செயல்பாடால் கடத்தப்பட்ட குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டிருப்பதாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) கிரண் சுருதி தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்டுள்ள பத்மாவுடன் பிடிபட்டுள்ள திருநாவுக்கரசு அவரது இரண்டாவது கணவர் என்பதும், அவர்களுக்கு இதுவரை குழந்தை இல்லாததும் தெரிய வந்துள்ளது. அவர்கள் இருவரும் ஒரு குழந்தைக்கு ஆசைப்பட்டு இந்த செயலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இன்ஸ்டா காதலுக்காக கணவரை கைவிட்ட பெண்.. நடத்தையில் சந்தேகித்து காதலியை கொன்ற காதலன்.. பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.