ETV Bharat / state

பாலாற்றுக்குள் பாய்ந்த கார்: நல்வாய்ப்பாக காயமின்றி உயிர் தப்பிய இளைஞர்!

author img

By

Published : Jan 7, 2020, 8:47 AM IST

Updated : Jan 7, 2020, 12:04 PM IST

வேலூர்: பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த கார், கட்டுப்பாட்டை இழந்து 30 அடி ஆழத்தில் பாலாற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

வேலூர்
வேலூர்

வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே வேப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன். இவர் தனது காரில் வேலூரை நோக்கி நேற்று சென்றுகொண்டிருந்தார். வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மேம்பாலத்தில் சென்றபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்தது. பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி சுமார் 30 அடி ஆழத்தில் பாலாற்றில் விழுந்து நொறுங்கியது.

இதில் நல்வாய்ப்பாக ராஜேஷ் கண்ணன் காயமின்றி உயிர் தப்பினார். வேலூர் கணியம்பாடி செங்கல் சூளைக்குச் சொந்தமான லாரி ஒன்று பின்னால் மோதுவதுபோல் வந்ததால்தான், கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச் சுவரில் கார் மோதியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து விருதம்பட்டு காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

வேலூரில் பாலாற்றுக்குள் பாய்ந்த கார்

இதையும் படிங்க: தொடரும் பைக் திருட்டால் வேலூரில் பரபரப்பு - சிசிடிவி காட்சிகள்!

Intro:வேலூர் மாவட்டம்

பாலத்தில் சென்ற சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து 30 அடி ஆழத்தில் பாலாற்றுக்குள் பாய்ந்தது- அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார்
Body:வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள வேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவர் சொகுசு காரில் வேலூரை நோக்கி சென்றார். வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மேம்பாலத்தில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து வலது புறம் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி சுமார் 30 அடி ஆழத்தில் பாலாற்றில் கார் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்து கார் சுக்கு நூறாக நொருங்கிய போதும் அதிர்ஷடவசமாக காரை ஓட்டிய ராஜேஷ் கண்ணன் எந்த காயமும் ஏற்படாமல் உயிர் தப்பினார். வேலூர் கணியம்பாடி செங்கல் சூளை லாரி ஒன்று பின்னால் மோதுவது போல் வந்த்தால் தான் கட்டுப்பாட்டை இழந்து ராஜேஷ் கண்ணன் தடுப்பு சுவரில் காரை மோதியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விருதம்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
Last Updated : Jan 7, 2020, 12:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.