வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை விசாரித்ததில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
பின்னர் அவர்களைச் சோதித்தபோது கஞ்சா பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது. அவர்களிடம் காவல் துறையினர் விசாரிக்கையில், ஆந்திராவிலிருந்து இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திவந்தது தெரியவந்தது.
இதனையடுத்து குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (20), நந்தகுமார் (23) ஆகியோரை கைதுசெய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சா உள்பட அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல்செய்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் நீதிமன்ற காவலில் குடியாத்தம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இது குறித்து குடியாத்தம் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: காவல் ஆய்வாளர் பொய் வழக்குப்பதிவு செய்து மிரட்டல்: காங். பிரமுகர் புகார்!