ETV Bharat / state

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விசிக முற்றுகை?

வேலூர்: விசிகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

vck
author img

By

Published : Jun 20, 2019, 7:18 PM IST

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 59ஆவது வார்டு அண்ணா நகர், விஸ்வநாதன் நகர், சரஸ்வதி நகர் ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்துவருகின்றன. இவர்கள் தங்களுக்கு அரசு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என மூன்று ஆண்டுகளாக கோரிக்கை வைத்துவருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களையும் நடத்தியுள்ளனர். ஆனாலும் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

விசிக, இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்

இந்த நிலையில் பட்டா வழங்காத மாவட்ட வருவாய் அலுவலரை கண்டித்து இன்று மேற்கண்ட பகுதியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர். தகவல் அறிந்து சத்துவாச்சாரி காவல் நிலைய ஆய்வாளர் அண்ணாதுரை நிகழ்விடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன்பிறகு காவல் துறையின் அறிவுரையின் பேரில் முற்றுகையிட வந்த சில நபர்கள் மட்டும் உள்ளே சென்று மனு அளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், மாவட்ட ஆட்சியர் ராமன் அப்போது வெளியே சென்றிருந்தார். இதையடுத்து கட்சி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தாட்சாயினியிடம் பட்டா வழங்கக் கோரி மனு அளித்தனர். இச்சம்பவத்தால் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Intro:பட்டா வழங்காமல் மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதால் ஆத்திரம்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட முயற்சி

Body:வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட 59 வது வார்டு அண்ணா நகர் விஸ்வநாதன் நகர் சரஸ்வதி நகர் ஆகிய பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர் இவர்கள் தங்களுக்கு அரசு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என மூன்று ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர் இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களையும் நடத்தியுள்ளனர் ஆனாலும் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது இந்த நிலையில் பட்டா வழங்காத மாவட்ட வருவாய் அலுவலரை கண்டித்து இன்று மேற்கண்ட பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர். தகவல் அறிந்து சத்துவாச்சாரி காவல் நிலைய ஆய்வாளர் அண்ணாதுரை சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார் அதன் பிறகு காவல் துறையின் அறிவுரையின் பேரில் முற்றுகையிட வந்த சில நபர்களை மட்டும் உள்ளே சென்று மனு அளிக்க அனுமதி அளிக்கப்பட்டது ஆனால் மாவட்ட ஆட்சியர் ராமன் வெளியே சென்றிருந்தார் இதையடுத்து கட்சி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தாட்சாயினிடம் பட்டா வழங்கக் கோரி மனு அளித்தனர் இச்சம்பவத்தால் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.