வேலூர் மாவட்டம், ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு, மினி வேன் ஒன்று வேலூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் சாலையில் உள்ள தடுப்புச் சுவற்றில் மோதியது. இந்த விபத்தில் ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்பு, அங்கிருந்த பொதுமக்கள் ஓட்டுநரைக் காப்பாற்றி அருகே உள்ள ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.