ETV Bharat / state

கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம் பிப்.28ஆம் தேதி தொடக்கம் - கலெக்டர் ஆலோசனை - Vaccination Camp for Livestock Beginning February 28th

வேலூர்: கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம் வரும் 28ஆம் தேதி தொடங்கவுள்ளதால், மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Vaccination Camp for Livestock Beginning February 28th

author img

By

Published : Feb 26, 2020, 12:01 PM IST

தமிழ்நாடு கால்நடைத் துறை சார்பில் தமிழ்நாடு முழுவதுமுள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வரும் 28ஆம் தேதி முதல் மார்ச் 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அந்த வகையில் வேலூர் மாவட்டம் முழுதும் உள்ள 2 லட்சத்து 5 ஆயிரம் கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம் வரும் 28ஆம் தேதி தொடங்குவதையொட்டி , மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கால்நடைத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தின்போது மாவட்டம் முழுவதும் உள்ள கால்நடைகளை முகாமில் பங்கேற்க வைப்பது குறித்தும், தவறாமல் தடுப்பூசி போட வைப்பது குறித்தும் அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகேயுள்ள வேலங்காடு கிராமத்தில் தடுப்பூசி முகாம் தொடங்கப்படவுள்ளது.

இதையும் படிங்க: 'தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறைக்கு 34 ஆயிரத்து 181 கோடியே 73 லட்சம் ரூபாய் ஒதுக்கியது'

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.