திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் மணிமாறன் என்பவர் கடந்த 17 ஆண்டுகளாக, ஆதரவற்ற நிலையில் உயிரிழக்கும் நபர்களின் உடலை அரசு அனுமதியுடன் அரசு மருத்துவமனைகளில் பெற்று தனது சொந்த செலவில் நல்லடக்கம் செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று (ஜூலை 29) ஆதரவற்ற நிலையில் உயிரிழந்து பல நாட்களாக யாரும் உரிமை கோராமல் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்த ஐந்து உடல்களை பெற்று வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பாலாற்றங்கரையில் அமைந்துள்ள இடுகாட்டில் முறைபடியும், போதிய பாதுகாப்புடனும் நல்லடக்கம் செய்தார்.
இதுவரை மொத்தம் ஆயிரத்து 115 ஆதரவற்றோர் உடல்களை நல்லடக்கம் செய்துள்ளளார்.
இதையும் படிங்க: சென்னை-மின்கம்பி அறுந்து விழுந்து பசு மாடுகள் உயிரிழப்பு