ETV Bharat / state

இருசக்கர வாகன விபத்து: வேலூரில் இருவர் உயிரிழப்பு

author img

By

Published : Jun 12, 2020, 1:49 PM IST

வேலூர்: வசூர் பகுதியில் அமைந்துள்ள வேலூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் பெயிண்ட் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.

இரண்டு தொழிலாளர்கள் உயிரிழப்பு
இரண்டு தொழிலாளர்கள் உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் வசூர் பகுதியில் அமைந்துள்ள வேலூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் விபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக சத்துவாச்சாரி காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

அந்தத் ததவலின் அடிப்படையில் சம்பவயிடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உடல்களை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

வேலூர் -சென்னை தேசிய நெடுஞ்சாலை

அதையடுத்து காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில், விபத்தில் உயிரிழந்தவர்கள் வேலூர் மக்கான் பகுதியைச் சேர்ந்த கருணாகரன் (30), பெருமாள் (32) என்பது தெரியவந்துள்ளது.

பெயிண்டிங் வேலை செய்துவரும் அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது வசூர் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்துள்ளனர். விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: அரசு பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு: தீவிர சிகிச்சையில் பள்ளி மாணவி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.