வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பல்லாலகுப்பம் காப்புக் காட்டில் மான் வேட்டையாடப்படுவதாக வந்த ரகசியத் தகவலின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பல்லலகுப்பம் காப்புக் காட்டில் நாய்கள் கடித்து இறந்த நிலையில் இருந்த பெண் புள்ளி மானை வெட்டி அதை இறைச்சியாக்கிக் கொண்டிருந்த நாவீதம்பட்டியை சேர்ந்த சந்தோஷ் (29), குருநாதபுரத்தை சேர்ந்த ஏழுமலை (28) ஆகிய இருவரைக் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்த 10 கிலோ மான் இறைச்சி, மான் தோல், மான் தலை மற்றும் இருசக்கர வாகனனத்தை பறிமுதல் செய்து வனத்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:சென்னையில் கை வரிசையில் ஈடுபடும் போதை ஆசாமிகள்