ETV Bharat / state

ராணிப்பேட்டை சிப்காட்டில் அடுத்தடுத்து 2 தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி பலி! - leather factory workers were electrocuted

Ranipet sipcot: ராணிப்பேட்டை சிப்காட்டில் இயங்கி வரும் தனியார் தோல் தொழிற்சாலையில் அடுத்தடுத்து இரு தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் அருகே மின்சாரம் தாக்கி தோல் தொழிற்சாலை ஊழியர்கள் இருவர் உயிரிழப்பு
சுரேஷ் காந்தி, நசீப்கான்(கோப்புப்படம்)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2023, 7:36 AM IST

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள தோல் தொழிற்சாலையில் தொடர்ந்து இரு நாட்களில் ஊழியர்கள் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள நிலையில் பாதுகாப்பு வசதி இல்லை என்று சக ஊழியர்கள் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கு வங்கம் மாநிலம், கர்பேட்டா பகுதியை சேர்ந்தவர் நசீப்கான்(வயது 23). சிப்காட் பேஸ் II ல் உள்ள தனியார் தோல் தொழிற்சாலை டிரம் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்தார். வழக்கம் போல் பணிபுரிந்துக் கொண்டிருந்த அவர், டிரம்மை காயவைக்க ஏர் ப்ளோயர் இயந்திரத்தை இயக்கியுள்ளார்.

இதையும் படிங்க: வருமான வரித்துறையினர் மீதான தாக்குதல்; 15 திமுகவினருக்கு கரூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்!

இந்நிலையில், எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில், மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். உடனடியாக சக ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர், நசீப்கான் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து, சிப்காட் போலீசார், நசீப்கான் உடலை பிரேத பரிசோதனைக்காக, வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று (செப்.28) தொழிற்சாலையில் பணியாற்றி வந்த சுரேஷ் காந்தி என்ற ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். தொடர்ந்து, இரு நாட்களில் இரு ஊழியர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் தோல் தொழிற்சாலை பணியாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்து இருவர் உயிரிழந்த நிலையில், பாதுகாப்பு வசதி குறைபாடு காரணம் எனக் கூறி சக ஊழியர்கள் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பாதுகாப்பு வசதிகள் முறையாக பின்பற்றப்படாததால் இத்தகைய உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. எனவே, நவீன தொழில்நுட்பங்கள் மூலம் பாதுகாப்பு வசதியை மேம்படுத்த வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: வரும் காலத்தில் இயற்கை விவசாய உற்பத்தி பொருட்களுக்காக தனி சந்தை உருவாக்கப்படும் - ஆளுநர் ஆர்.என்.ரவி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.