ETV Bharat / state

இடத்தகராறில் வழக்கறிஞர்களுக்கு அரிவாள் வெட்டு!

வேலூர்: திருப்பத்தூர் அருகே இடத் தகறாரில் வழக்கறிஞர்களை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கத்தி குத்தில் காயமடைந்த வழக்கறிஞர்
author img

By

Published : May 4, 2019, 11:05 PM IST

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால் (22). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர்களான ராஜவேல் (30) மற்றும் கதிர்வேலுக்கும் இடையே நீண்ட நாட்களாக இடம் தகராறு இருந்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை ராஜகோபால் தனது வீட்டின் அருகில் இருக்கும் புளியமரத்தை வெட்டியுள்ளார். இதை அறிந்த வழக்கறிஞர்கள் இருவரும் அந்த புளியமரம் தங்களுக்கு தான் சொந்தம் எனக் கூறி ராஜகோபாலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியதைத் தொடர்ந்து தான் வைத்திருந்த கத்தியால் வழக்கறிஞர்கள் இருவரையும் ராஜகோபால் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:திருப்பத்தூர் அருகே வழக்கறிஞர் இருவருக்கு கத்தியால் வெட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி

Body: வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை இஸ்மாயில் பேட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் ராஜகோபால் (22) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் ராஜவேல் (30) மற்றும் கதிர்வேல் வழக்கறிஞர்கள் இவர்களுக்கு இடையே சொத்து தகராறு இருந்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை மீண்டும் இரு தரப்புக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அப்போது ராஜகோபால் தனது வீட்டில் இருக்கும் புளியமரத்தை வெட்டும் பணியில் ஈடுப்பட்டுள்ளார்.

அதை அறிந்த கிருஷ்ணன் மகன் ராஜவேல் இந்த மரம் எங்களுக்கு சொந்தமான மரம் என கூறி வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

அப்போது ஒருவருக்கொருவர் சண்டை ஏற்பட்டு அப்போது ஆவேசம் அடைந்த ராஜகோபால் தான் வைத்திருந்த கத்தியை கொண்டு ராஜவேல் மற்றும் கதிர்வேலை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந் இருவரையும் மீட்ட அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Conclusion: இது குறித்து கந்தலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.