ETV Bharat / state

மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி!

author img

By

Published : Dec 21, 2020, 5:37 PM IST

வேலூர்: மணமகன் வீட்டார் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி
மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் தினகரன் (55). மாற்றுத்திறனாளியான இவர் இன்று (டிச. 21) அவரது மனைவி, மகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.

திடீரென தினகரன் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அங்கிருந்த காவல் துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர். அவரது மனைவி, மகள் கதறி அழுதனர்.

மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி

விசாரணையில் தினகரன் தனது மகளுக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளார். சில நாள்களுக்கு பிறகு மணமகன் வீட்டார் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர்.

இதனால் மனவேதனையில் தீக்குளிக்க முயற்சித்தார் என்பது தெரியவந்தது. தொடர்ந்து காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவரிடம் தெரிவித்தனர்.

இதேபோன்று அண்மையில் ஆட்டோ டிரைவர் தீக்குளிக்க முயன்றார். இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடுதல் காவல் துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் தினகரன் எப்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் மண்ணெண்ணெய் கொண்டு வந்தார் என விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: திமுக ஊராட்சி தலைவர் மிரட்டல்: குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற நபர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.