வேலூர் மாநகராட்சி 3ஆவது மண்டலத்துக்குட்பட்ட ஓட்டேரியிலிருந்து பாலமதி செல்லும் சாலையில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் முடிவடைந்தது. தற்போது சாலை அமைப்பதற்கான பணிகள் கடந்த 15 நாள்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாலை அமைப்பதற்கு முன்பாக ஜல்லி போடப்பட்டுள்ளது.
இன்று மாலை பாலமதியில் இருந்து ஜல்லிகற்கள் ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக, பாதாள சாக்கடை போடப்பட்டிருந்த பள்ளத்தில் சிக்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும் பாதாள சாக்கடையை முறையாக மண் போட்டு மூடாததால் இது போன்று பள்ளம் ஏற்பட்டு லாரி சிக்கியதாகவும்.
இவ்வழியாக பாலமதி, கொலவிமேடு, பள்ள இடையாம்பட்டி, வெங்கடாபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலை என்றும், மேலும் தனியார் மற்றும் அரசு பள்ளிகள், ஒரு அரசு கலை கல்லூரி உள்ளதால் மழை காலம் தொடங்கிய நிலையில் சாலை சேறும் சகதியுமாய் காணப்படுவதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளதாகவும். ஆகவே அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை விரைந்து அமைத்துத்தர வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் உரத்தட்டுப்பாடு இல்லை - வேளாண் துறை அமைச்சர் தகவல்!