ETV Bharat / state

நிவர் புயல்: கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம் - Nivar cyclone

வேலூர்: மழை மற்றும் வெள்ள அவசர தேவைகளுக்காக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் அவசர கால கட்டுப்பாட்டு அறையின் மூலம் கட்டணமில்லா தொலைபேசி எண் "1077” மற்றும் “0416-2258016” என்ற எண்களை தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

vellore
vellore
author img

By

Published : Nov 24, 2020, 7:23 AM IST

இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளிட்டுள்ள செய்திக்குறிப்பில் "வங்காள விரிகுடா கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நவம்பர் 24 அன்று “நிவர்” என்கிற அதி தீவிர புயலாக மாறி நவம்பர் 25 அன்று பிற்பகல் சென்னையை அடுத்துள்ள மகாபலிபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்கும் எனவும், புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் சுமார் 125 கிலோமீட்டர் அளவில் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு வீசிய வர்தா புயல் கரையை கடந்த போது அதிகபட்சமாக சுமார் 165 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் வேலூர் மாவட்டத்தை பொறுத்த வரை 31 வீடுகள் பகுதியாகவும், 6 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்தன.

வர்தா புயலின்போது உயிரிழப்பு ஏதுமில்லை என்றாலும் 60.72 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதற்கான மொத்த நிவாரணத் தொகையாக 9 லட்சத்து 76 ஆயிரத்து 820 ரூயாய் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. "நிவர்" புயலின் காரணமாக வேலூர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் மழை மற்றும் வெள்ள அவசர தேவைகளுக்காக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் அவசர கால கட்டுப்பாட்டு அறையின் மூலம் கட்டணமில்லா தொலைபேசி எண் "1077” மற்றும் “0416-2258016” என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.

மேலும் குடிசைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் குடும்பங்கள் அருகாமையில் உள்ள பள்ளிக் கட்டடங்ளுக்கு சென்று பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் முதலான அத்தியாவசியப் பொருள்கள் கிராம நிர்வாக அலுவலர்களால் வழங்கப்படும். ஏரிகள், குளங்கள் ஆகிய நீர்நிலைகளில் சில இடங்கள் ஆழமானதாக உள்ளதால் சிறுவர்கள், நீச்சல் தெரியாதவர்கள் அங்கு குளிப்பதற்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. தென்னை மரங்களைப் பாதுகாக்க ஒரு சில தென்னைகீற்றுகள், இளநீர் குலைகளை வெட்டிவிடுதன் மூலம் அந்த மரங்கள் காற்றின் வேகத்திற்கு விழுந்துவிடாமல் தடுத்து காப்பாற்ற முடியும் என்பதை விவசாயிகள் அறிந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.