ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வேலூர் மாவட்டத்தில் எந்தவித காரணமுமின்றி சுற்றித்திரியும் இருசக்கர வாகன ஓட்டிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யுமாறு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவிட்டிருந்தார்.
அதன்பேரில் நேற்று (மே 31) வேலூர் மாவட்டம் முழுவதும் தேவையின்றி சுற்றித் திரிந்த நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று ஒரு நாளில் 370 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர்களது வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.
மேலும் நோய்த்தொற்றின் வீரியம் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக வேலூர் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் அசோகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி