ETV Bharat / state

பாசிச சக்திகள், திமுக சந்தர்பவாத அரசியலில் இருந்து தமிழ்நாட்டை காக்க வேண்டும் - ஓவைசி பேச்சு - அசாதுத்தீன் ஒவைசி பேச்சு

பாசிச சக்திகளிடமிருந்தும், திமுகவின் சந்தர்பவாத அரசியலில் இருந்தும் தமிழ்நாட்டை காத்திட வேண்டும். தங்களை மதசார்பற்ற கட்சி என்று கூறிக்கொள்பவர்கள் நாளையே மோடியின் கைப்பாவையாக மாறமாட்டார்கள் என்பதற்கு யாரும் உத்தரவாதம் அளிக்க முடியாது. எனவே தமிழ்நாட்டில் மூன்றாவது அரசியல் அணியாக உருவாகியிருக்கும் அமமுக அணிக்கு ஆதரவு அளிக்குமாறு ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுத்தீன் ஓவைசி பேசியுள்ளார்.

Owaisi speech
ஒவைசி பேச்சு
author img

By

Published : Mar 25, 2021, 10:16 AM IST

Updated : Mar 25, 2021, 11:54 AM IST

வேலூர்: அமமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் வேலூர் மாங்காய் மண்டியில் நடைபெற்றது.

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள அமமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் 13 வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் வேலூர் மாங்காய் மண்டியில் நடைபெற்றது. இதில், அமமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுத்தீன் ஓவைசி, எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணை தலைவர் தெஹலான் பாகவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் அசாதுத்தீன் ஒவைசி பேசியதாவது:

மெகா கூட்டணி

டிடிவி தினகரன் தலைமையிலான இந்த மெகா கூட்டணி தமிழ்நாட்டில் மூன்றாவது மிகப் பெரிய அரசியல் அணியாக உருவெடுக்கும். தமிழ்நாடு அரசியலில் இரண்டு கட்சிகள் மட்டுமே மீண்டும் மீண்டும் வருவதை தமிழ்நாடு மக்கள் விரும்பவில்லை.

இலங்கைக்கு எதிராக வாக்களிக்காத மோடி அரசு

இலங்கை விவகாரத்தில் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்காத மோடி அரசுக்கு அதிமுக எப்படி ஆதரவு அளிக்கிறது மோடி அரசாங்கம் மனித உரிமைகளுக்கு மரியாதை அளிக்கவில்லை.

இலங்கைக்கு எதிராக வாக்களிக்காத மோடி

மோடியின் அங்கமாக இருக்கும் அதிமுக

வேலூரில் தோல் தொழிற்சாலைகளில் பணியாற்றிய 75 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். ஆனால் பாஜக அரசு தனது தேர்தல் அறிக்கையில் கண்டிப்பாக பசுவதை சட்டத்தை அமல்படுத்துவோம் என்று கூறி உள்ளது. 1976இல் இது தொடர்பான சட்டம் இருந்தும் பாஜக மீண்டும் அதனை வலியுறுத்தி வருகிறது.

வரும் தேர்தலில் அதிமுகவை மட்டுமல்லாது, திமுகவையும் தோற்கடிக்க வேண்டும். உங்களுக்கு தெரியும் இதற்கு முன்பாக திமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தது. தற்போது அதிமுக நரேந்திர மோடியின் ஒரு அங்கமாக ஆகியுள்ளது.

மதசார்பற்றி கூட்டணி எதிர்பார்க்கும் மக்கள்

தமிழ்நாடு மக்கள் மதச்சார்பற்ற கூட்டணியைதான் எதிர்பார்க்கின்றனர். அந்தக் கூட்டணி இந்திய அரசியலமைப்பில் உள்ள நம்பிக்கை, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் நீதி ஆகியவற்றை தாங்கி பிடிக்கின்ற பிரதிநிதியாக மட்டுமல்லாமல் அண்ணா, பெரியார், அம்மா ஆகியோர் கனவு கண்ட தமிழ்நாட்டை நிறைவேற்றக்கூடிய கூட்டணியாகவும் இருக்க வேண்டும். இதனை டிடிவி தினகரனால் மட்டுமே முன்னெடுத்துச் செல்ல முடியும்.

பாஜகவை வீழ்த்துவது குறித்து திமுகவினர் மட்டும்தான் பேச முடியுமா? ஏன் நாங்களும்தான் பாஜகவை வீழ்த்த விரும்புகிறோம். நாங்கள் பாஜகவின் பி டீம் என்றும், ஓட்டுக்களை பிரிக்கின்றோம் என்று கூறும் திமுக கூட்டணிக்கு ஒன்றை உரக்கச் சொல்கிறேன். நாங்கள் இங்கு வெற்றி பெறுவதற்காக வந்துள்ளோம், யார் தோற்றாலும் வெற்றி பெற்றாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்களது கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களது முக்கியமான குறிக்கோள்.

கூட்டணி கட்சிகள் வெற்றி பெறுவதே எங்களது நோக்கம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி, சிவசேனாவை ஆதரிக்கிறது. பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தால் சிவசேனா பெருமைகொள்கிறது என்று அதன் முதலமைச்சர் மராட்டிய சட்டப்பேரவையில் அந்த சம்பவத்துக்கு ஆதரவாக பேசுகிறார். இதனை காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ள ஸ்டாலின் ஆதரிப்பாரா என்று கேள்வி எழுப்பினார்.

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான தீர்மானத்துக்கு ஏன் திமுக ஆதரவளிக்கவில்லை

மக்களவையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நான் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தேன். அதிமுகவை மோடியுடைய கைப்பாவை என்று அனைவருக்கும் தெரியும். எடப்பாடி மோடியின் மடியில் அமர்ந்து டீ குடித்துக்கொண்டிருக்கிறார்.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நான் கொண்டு வந்த தீர்மானத்துக்கு காங்கிரஸ், திமுக ஆதரவு அளிக்கவில்லை

ஆனால் இதுபற்றி திமுக தலைமையிடம் ஒன்றை கேட்க விரும்புகிறேன். என்னுடைய தீர்மானத்துக்கு ஆதரவாக வெறும் 9 வாக்குகள் மட்டுமே பெற்றேன். ஆனால் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பாஜக 324 வாக்குகளை பெற்றது. எனது தீர்மாணத்துக்கு ஆதரவளிக்க விடாமல் திமுகவையும், காங்கிரஸையும் தடுத்தது எது என்றார்.

பாசிச சக்திகள், திமுக சந்தர்ப்பவாத அரசியல் ஒழிய வேண்டும்

எனவே தான் கூறுகிறேன் தமிழ்நாட்டுக்கு மூன்றாவதாக ஒரு அரசியல் அணி தேவை. தங்களை மதச்சார்பற்ற கட்சி என்று கூறிக்கொள்ளும் கட்சிகள் யாவும் அப்படி இல்லை. இது போன்ற கட்சிகள் நாளையே மோடியுடைய கைப்பாவைகளாக மாறாது என்று யாராவது உத்தரவாதம் அளிக்க முடியுமா?

பாசிச சக்திகளிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும், திமுகவின் சந்தர்பவாத அரசியலில் இருந்து தமிழகத்தை காத்திட வேண்டும்.

இவ்வாறு ஓவைசி பேசினார்.

இதைத்தொடர்ந்து பேசிய டிடிவி தினகரன், “சிறுபான்மையின மக்களுக்கு துரோகியாக உள்ள திமுகவை வரும் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். திமுக, அதிமுக போன்ற துரோகி கட்சிகள் ஒழிய வேண்டும். வரும் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணியை ஆதரித்து வாக்களிக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

திமுக, அதிமுக போன்ற துரோகி கட்சிகள் ஒழிய வேண்டும்

தமிழ்நாட்டில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆட்சி அமையவும், சமூக நீதி மற்றும் சம உரிமை ஆகிய கோட்பாட்டில் ஆட்சியை நடத்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு அளிக்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க: முக்கூடல் அருகே கொலை செய்யப்பட்ட திமுக பிரமுகரின் குடும்பத்தினருக்கு உதயநிதி ஆறுதல்

Last Updated : Mar 25, 2021, 11:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.