ETV Bharat / state

ராகுல்தான் அடுத்த பிரதமர் என பொய் கூறி வென்ற திமுக! - விமர்சித்த எடப்பாடி - CM Ediappadi Palaniswami

வேலூர்: ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர் என்று பொய் கூறி குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வெற்றிபெற்றுள்ளது என தேர்தல் புரப்புரையின்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

tn cm
author img

By

Published : Jul 29, 2019, 10:02 AM IST

வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடியாத்தம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில், "கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து வெற்றிபெற்றுள்ளது. அதன்படி நாங்கள் வெற்றிபெற்றால் மாதம் ஆறாயிரம் என வருடத்திற்கு ரூ.72,000 கொடுப்போம் என்று சொன்னார்கள். எங்கிருந்து கொடுக்க முடியும் இந்திய கஜானாவில் கூட அவ்வளவு தொகை இல்லை.

ராகுல் காந்திதான் பிரதமராக வருவார். காங்கிரஸ் கூட்டணிதான் வெற்றிபெறும் என்று பொய் கூறி குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்றுள்ளது. அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலரை பிரித்து தன்வசமாக்கி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்தார்கள் அதுவும் நடக்கவில்லை.

கட்சியை உடைக்க வேண்டும் என்று நினைத்தார்கள் எதுவும் நடக்கவில்லை. இதையடுத்து வருகின்ற 2021 பொதுத் தேர்தலிலும் நிச்சயம் அதிமுகதான் வெற்றிபெறும்" என்று அவர் தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி தேர்தல் பரப்புரை

Intro:வேலூர் மாவட்டம்

ராகுல் பிரதமர் ஆவார் என்று பொய் கூறி குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ளது - தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பேச்சுBody:வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகத்தை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குடியாத்தம் பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் அப்போது அவர் பேசுகையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து வெற்றி பெற்றுள்ளது குறிப்பாக 4 பொய் வாக்குறுதிகளை கொடுத்தார்கள் அதன்படி நாங்கள் வெற்றி பெற்றால் மாதம் 6 ஆயிரம் என வருடத்திற்கு 72000 கொடுப்பேன் என்று சொன்னார்கள் எங்கிருந்து கொடுக்க முடியும் இந்திய கஜானாவில் கூட அவ்வளவு தொகை இல்லை அப்படி இருக்கும்போது பொய்யான வாக்குறுதியை கொடுத்து வெற்றி பெற்றுள்ளார்கள் ராகுல் காந்திதான் பிரதமராக வருவார் காங்கிரஸ் கூட்டணி தான் வெற்றி பெறும் என்று பொய் கூறி குடியாத்தம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது சட்டமன்ற தேர்தல் நடைபெற்றால் நாங்கள் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று வாக்குறுதி கொடுக்கலாம் ஆனால் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வாக்குறுதிகளைக் கொடுத்து குடியாத்தம் உள்ளிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரை பிரித்து தன்வசமாக்கி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்தீர்கள் அதுவும் நடக்கவில்லை அதுமட்டுமில்ல கட்சியை உடைக்க வேண்டும் என்று நினைத்தீர்கள் எதுவும் கிடைக்கவில்லை 2021 பொதுத் தேர்தலிலும் நிச்சயம் அதிமுக தான் வெற்றி பெறும் என்றார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.