வேலூர் ஆசிரியர் இல்லத்தில் திருவள்ளூவர் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மூன்றாம் மண்டல கூட்டம், அதன் தலைவர் ஆசீப் அகமது தலைமையில் நேற்று(டிச. 21) நடைபெற்றது. இதில் செயலாளர் பிரின்ஸ் பிரபாகர் , பொருளாளர் சசிகலா மற்றும் பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
திருவள்ளுவர் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பேராசிரியர் இளங்கோ பேட்டி பின்னர் முன்னாள் ஆட்சிமன்ற குழு உறுப்பினரும் போராட்டகுழு ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் இளங்கோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: "திருவள்ளூவர் பல்கலைகழகத்தில் தற்போது துணை வேந்தராக இருப்பவர் தாமரைசெல்வி. இவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுவருவதோடு எல்லாவற்றிற்கும் தன்னிச்சையாகயவும், சர்வாதிகாரியாகவும் செயல்படுகிறார்.எந்தப் பணிக்கும் டெண்டர் வைப்பதில்லை. அவருக்கு வேண்டிய நபரான ஜான் இருதயராஜ் என்பவருக்கு பணிகள் வழங்கப்படுகிறது. இப்பல்கலைக் கழகத்திற்கு நிரந்தரப் பதிவாளர், தேர்வு கட்டுபாட்டு அலுவலர், நிதி அலுவலர் என எவருமில்லை.இப்பல்கலைகழகத்திற்கு 80 லட்சம் ரூபாய் செலவில் ராஜஸ்தானிலிருந்து விடைத்தாள்கள் கொள்முதல் செய்துள்ளனர். அதிலும் முறைகேடு, கரோனா காலத்தில் மாணவர்களை தேர்வு எழுதாமல் தமிழ்நாடு அரசு தேர்ச்சி பெற செய்ததது. ஆனால், ஒவ்வொரு தாளுக்கும் ரூ.90 செலுத்தி மீண்டும் தேர்வு எழுத வேண்டுமென கூறுகின்றனர். மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ளவில்லை எனக் கூறி ரூ.1000 கட்டாயம் வசூலிக்கப்படுகிறது. அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் சூரப்பாவை போல் திருவள்ளூவர் பல்கலைகழக துணை வேந்தர் தாமரைசெல்வி தன்னிச்சையாக செயல்படுவதால் இவர் மீது தமிழ்நாடு அரசு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்.
மேலும் கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்கள் விரோதபோக்கைக் கடைபிடிக்கிறார்கள். எனவே இவைகளைக் கண்டித்து வரும் ஜனவரி 11ஆம் தேதி திருவள்ளுவர் பல்கலைகழகம் முன்பு மாணவர்கள், கல்லூரி ஆசிரியர்கள், பொதுமக்கள் பங்கேற்கும் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: ஈடிவி பாரத் செய்தி எதிரொலி:தனியார் மூலம் மின்வாரிய ஊழியர்களை நியமிக்கும் அரசாணை ரத்து