திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிமலை தந்தை பெரியார் அரங்கில் அம்மாவட்டத்தின் அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், போக்குவரத்து முதன்மைச் செயலாளருமான டி.எஸ். ஜவகர் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மருத்துவர் விஜயகுமார், மருத்துவத் துறை, ஊரகத் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய ஜவகர், திருப்பத்தூர் மாவட்டம் தொடங்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு உள்ளேயே அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்களின் சிறப்பான பணியால் திருப்பத்தூர் பொங்கல் பரிசு தொகுப்பு பொது விநியோகம் திட்டத்தில் தமிழ்நாட்டிலே முதன்மை மாவட்டமாக 99.6 விழுக்காடு பெற்று முதலிடத்தில் பெற்றது எனக் கூறினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் ஜவகர், "திருப்பத்தூர் மாவட்டம் 2019 நவம்பர் 28ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. என் தலமையில் திருப்பத்தூரில் முதல் கூட்டம் திருப்பத்தூர் தனியார் திருமண மண்டபத்திலும் இரண்டாவது கூட்டம் தற்போது ஏலகிரி மலையில் பெரியார் அரங்கத்தில் நடைபெற்றது" என்றார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட துணை வனக்காவலர், உயர் அலுவலர்கள், அனைத்துத் துறையின் உயர் அலுவலர்கள் அனைத்து பணிகளும் ஆய்வுசெய்து எல்லா பணிகளும் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
மேலும் திருப்பத்தூர் முழுவதிலும் வருகின்ற வெயில் காலத்தில் குடிதண்ணீர் பற்றாக்குறையைத் தீர்க்க இப்போதிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் வளர்ச்சிப் பணிக்காக இங்கு வருகைதந்து பார்வையிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படியுங்க: குமரியில் கூட்டம் கூட்டமாகச் குரங்குகள் அட்டகாசம்!