ஆந்திர மாநிலத்திலிருந்து, வேலூருக்கு கஞ்சா கடத்திவருவதாகக் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின்பேரில் கிருஷ்டியான்பேட் சோதனைச்சாவடியில் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையினர் நேற்று (டிசம்பர் 30) சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த ஆந்திர மாநில அரசுப் போருந்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் திருப்பூரைச் சேர்ந்த கதிர்ராஜா (50), வீரணன் (45), வீரணனின் மனைவி புனிதா (35) ஆகியோர் 34 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
அவற்றைப் பறிமுதல்செய்து மூவரையும் கைதுசெய்த வேலூர் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் காட்பாடி நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: குழந்தையிடம் கைவரிசை காட்டிய நபர் கைது