ETV Bharat / state

ஊராட்சி ஒன்றிய கட்டமைப்பில் மறுசீரமைப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் - Public hearing meeting in vellore

வேலூர்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய கட்டமைப்பில் மறுசீரமைப்பு செய்வது குறித்த கருத்து கேட்புக் கூட்டம் ஆட்சியர் அலுவலர்கத்தில் நடைபெற்றது.

vellore local body election
vellore local body election
author img

By

Published : Jan 12, 2020, 10:35 AM IST

வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, இந்த மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டனர்.

அதன்படி திருப்பத்தூர் ஆட்சியராக சிவனருள், ராணிப்பேட்டை ஆட்சியராக திவ்யதர்ஷினி ஆகியோர் பணிபுரிகின்றனர். இதனிடையே, நிர்வாக ரீதியாக புதிய மாவட்டங்களில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஊராட்சி ஒன்றிய கட்டமைப்பில், மறுசீரமைப்பு செய்வது குறித்து பொதுமக்கள் கருத்துகேட்புக் கூட்டம் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றிய கட்டமைப்பு மறுசீரமைப்பு குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம்

இதில், வேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரம், ராணிப்பேட்டை ஆட்சியர் பிரியதர்ஷினி, திருப்பத்தூர் ஆட்சியர் சிவனருள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு கிராம ஊராட்சிகளை நிர்வாக வசதிக்காக இணைப்பது குறித்தும் நீக்கம் செய்வது குறித்தும் பொதுமக்கள் கருத்துகளை தெரிவித்தனர். குறிப்பாக பிற ஊராட்சிகளுடன் இணைக்கும்போது அதிக தூரம் செல்லக்கூடிய வகையில் இல்லாமல் குறிப்பிட்ட தொலைவில் ஊராட்சி ஒன்றியங்கள் இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் முன்வைத்தனர்.

பின்னர் வேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறுகையில், ஊராட்சிகளை பிற ஊராட்சி ஒன்றியங்களுடன் பிரிப்பது மற்றும் இணைப்பது குறித்து ஆட்சேபனை கருத்துகளை கூட்டத்தில் வந்த அனைவரும் தெரிவிக்கலாம். இது தொடர்பாக மனு அளிக்கலாம் என்றார்.

இதையும் படிங்க: 'ஒன்றும் தெரியாதவர்களை ஆட்சியில் அமர்த்தினால் இப்படிதான்' - ஜெ. அன்பழகன்

Intro:வேலூர் மாவட்டம்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றிய கட்டமைப்பில் மறு சீரமைப்பது குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் மூன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பங்கேற்புBody:வேலூர் மாவட்டம் அண்மையில் பிரிக்கப்பட்டு திருப்பத்தூர் ராணிப்பேட்டை ஆகிய இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன இதையடுத்து புதிய மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டனர் அதன்படி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக சிவனருள் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக திவ்யதர்ஷினி ஆகியோர் பணிபுரிகின்றனர் தொடர்ந்து நிர்வாக ரீதியாக புதிய மாவட்டங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவது அந்த வகையில் ஊராட்சி ஒன்றிய கட்டமைப்பில் மறுசீரமைப்பு செய்வது குறித்த பொது மக்கள் கருத்துகேட்பு கூட்டம் இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது இதில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பிரியதர்ஷினி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர் இந்த கூட்டத்தில் பல்வேறு கிராம ஊராட்சிகளை நிர்வாக வசதிக்காக இணைப்பது குறித்தும் நீக்கம் செய்வது குறித்தும் பொதுமக்கள் பல்வேறு கருத்துகளை அமைத்தனர் குறிப்பாக பிற ஊராட்சிகளுடன் இணைக்கும்போது அதிக தூரம் செல்லக்கூடிய வகையில் இல்லாமல் குறிப்பிட்ட தொலைவில் ஊராட்சி ஒன்றியங்கள் இணைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் கூட்டத்திற்கு பிறகு வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறுகையில், இங்கே குறிப்பிடப்பட்ட ஊராட்சிகளை மற்ற ஊராட்சி ஒன்றியங்களுடன் பிரிப்பது மற்றும் இணைப்பது குறித்து ஆட்சேபனை கருத்துகளை கூட்டத்தில் வந்த அனைவரும் தெரிவிக்கலாம் மனுக்களாகவும் அளிக்கலாம் இதுதொடர்பாக அடுத்த மாதம் மற்றொரு கூட்டம் நடத்தி கலந்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்தார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.