ETV Bharat / state

மனைவியை பிரிந்த சோகத்தில் கணவன் தற்கொலை

திருப்பத்தூர்: வேலைக்குச் செல்ல வற்புறுத்திய மனைவியுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக கணவன் உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மனைவியினை பிரிந்த சோகத்தில் கணவன் தற்கொலை!

author img

By

Published : Feb 6, 2020, 11:42 PM IST

திருப்பத்தூர் சேர்மன் ரங்கநாதன் தெருவினைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர் வழக்கறிஞர் ஒருவரிடம் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் கார்த்திகேயன் (32) என்பவருக்கு கோப்பெருந்தேவி என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்துள்ளது. இந்நிலையில், கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

கார்த்திகேயனை வேலைக்குச் செல்லுமாறு பலமுறை வற்புறுத்தியும் வேலைக்குச் செல்லாததால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கோப்பெருந்தேவி கணவருடன் கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். ‌

இந்நிலையில், மனைவியை பிரிந்த சோகத்தில் வீட்டில் தனியாக இருந்த கார்த்திகேயன், மனமுடைந்து உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மனைவியை பிரிந்த சோகத்தில் கணவன் தற்கொலை

மேலும், தனது கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லையென்றும், தன் மனைவியை யாரும் எந்தவித கேள்வியும் கேட்க வேண்டாம் எனவும், தன்னுடைய மரணத்திற்கு தானே காரணம் எனவும் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அவரது உறவினர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: சதுரங்க வேட்டை’ பாணியில் அரங்கேறிய மோசடி - திமுக பிரமுகர் உள்பட மூவர் கைது!

Intro:Body:

மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் மனம் உடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை-உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சேர்மன் ரங்கநாதன் தெரு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் இவர் வழக்கறிஞரிடம் கிளர்க்காக வேலை செய்கிறார். இவருடைய மகன் கார்த்திகேயன் (32) இவருக்கு திருமணம் முடிந்து மனைவி கோப்பெருந்தேவி உள்ளார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே வாய்த்தகராறு வந்துள்ளது. கார்த்திகேயனை வேலைக்கு செல்லுமாறு பலமுறை வற்புறுத்தியும் வேலைக்கு செல்லாததால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது வேலைக்கு செல்லாததால் கோப்பெருந்தேவி கணவருடன் கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார் ‌ இந்நிலையில் மனமுடைந்த கார்த்திகேயன் வீட்டில் தனியாக இருந்தபோது உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். தன்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என் மனைவியை யாரும் கேட்க வேண்டாம் என் சாவிற்கு நானே காரணம் என்றும் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தால் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.