ETV Bharat / state

குடிநீரின்றித் தவிக்கும் கிராம மக்கள்: 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்! - வேலூர் மாவட்ட செய்திகள்

வேலூர்: திருப்பத்தூர் அருகே ஆறு மாத காலமாக முறையான குடிநீர் வழங்காததால், மழைநீரைக் குடித்துவருவதாகக் கூறி 200-க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
author img

By

Published : Oct 30, 2019, 7:24 PM IST

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியத்திற்குள்பட்ட பெரியகரம் பகுதியில் சுமார் 1500 வீடுகள் உள்ளன. இப்பகுதியில் ஆறு மாத காலமாக முறையான குடிநீர் வழங்கவில்லை என வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் ஊராட்சி செயலாளரிடமும் பலமுறைக் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இப்பகுதி மக்கள் சமீபத்தில் பெய்த மழைநீரைப் பிடித்துவைத்து குடித்துவருவதாகவும் இதனால் நோய்த்தொற்று ஏற்பட்டு பலர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். வசதி படைத்தவர்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கிவிடுகின்றனர். ஏழை மக்கள் எவ்வாறு வாங்க முடியும் என்றும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

'நாங்கள் தண்ணீர்தான் கேட்கிறோம். எங்களது கோரிக்கையை ஏற்று விரைவில் தண்ணீர் வழங்க வேண்டும்' எனக்கூறி 200-க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் திருப்பத்தூர்-பெங்களூரு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் வாக்குவாதம், தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் அங்கு வந்த வட்டாட்சியர் ஆனந்த கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாவதி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் குடிநீர் வழங்கப்படும் எனக் கூறியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க : வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன்... காங்கிரஸ் வேட்பாளரைக் கண்டித்து சாலை மறியல்!

Intro:திருப்பத்தூர் அருகே 6மாத காலமாக முறையான குடிநீர் வழங்கவில்லை என்றும் சமீபத்தில் பெய்த மழை நீரை குடித்து இதனால் காய்ச்சல் வந்து மருத்துவமனையில் சிக்ச்சை பெற்று வருகின்றனர் இதனால் ஆத்திரம் அடைந்து அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் 200 க்கும் மேற்பட்டோர் சாலைமறியல்Body:

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியகரம் மேல் சுண்ணாம்பு களை பகுதியில் சுமார் 1500 வீடுகள் உள்ளன இப்பகுதியில் சுமார் 6 மாத காலமாக முறையான குடிநீர் வழங்கவில்லை என்று பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கூறியும் ஊராட்சி செயலாளர் .இடம் கூறியும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சமீபத்தில் பெய்த மழை நீரை குடித்து வருவதாகவும் இதனால் நோய் தொற்று வந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வசதி படைத்தவர் குடி தண்ணீரை விலைகொடுத்து வாங்கி விடுகின்றனர் எங்களை போல் ஏழ்மையில் உள்ளவர்கள் எப்படி முடியும் நாங்கள் குடிக்க தண்ணீர் தான் கேட்கின்றோம் நாங்கள் பலமுறை கூறியும் எந்தஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்று
200க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் திருப்பத்தூர் to பெங்களூர் செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர் இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் தள்ளு முள்ளு ஏற்பட்டது தகவலறிந்து வந்த வட்டாட்சியர் ஆனந்தா கிருஷ்ணன் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாவதி உதவியாளர் ராஜா ஆகியோர் சம்பவயிடத்திற்க்கு விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக கூரியதின் அடிப்படையில் பொதுமக்கள் சாலை மறியல் கைவிட்டு சென்றனர் இதனால் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு இதனால் பணிக்கு செல்பவர்கள் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் பெரும் தவிப்பு......Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.