ETV Bharat / state

வீட்டின் பூட்டை உடைத்து தங்கநகை, பணம் கொள்ளை!

வேலூர்: குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்ற உணவு விடுதி உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 16 சவரன் நகை, 45 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

vellore theft
ஆம்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
author img

By

Published : Nov 27, 2019, 5:00 PM IST

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கீழ்முருங்கை பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார் சதீஷ். இவர் தனது சகோதரன் வினோத் குடும்பத்துடன் சேர்ந்து அமாவாசை வேண்டுதல் நிறைவேற்ற நேற்று மாலை விழுப்புரம் மாவட்டம் மலையனூர் கோவிலுக்குச் சென்றுள்ளனர்.

பின்னர், மீண்டும் விடியற்காலை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். வீட்டின் இரண்டு அறைகளிலிருந்த பீரோ உடைத்து 16 சவரன் நகை, 45 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆம்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
மேலும் கீழ்முருங்கை பகுதியில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பல இடங்களில் மர்ம நபர்கள் கைவரிசை நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது

இதையும் படிங்க: பொங்கல் பரிசு 1,000 ரூபாய் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Intro:ஆம்பூர் அருகே குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 16 சவரன் நகை மற்றும் 45 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளைBody:

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கீழ்முருங்கை பகுதியில் ஹோட்டல் நடத்தி வருபவர் சதீஷ் இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் அவரது தம்பி வினோத் என்பவருக்கு கடந்த மாதம் திருமணம் நடந்துள்ளது இந்தநிலையில் நேற்று மாலை சதீஷ் மற்றும் வினோத் குடும்பத்துடன் அமாவாசை வேண்டுதல் நிறைவேற விழுப்புரம் மாவட்டம் மலையனூர் கோவிலுக்கு சென்றுள்ளனர் பிறகு மீண்டும் விடியற்காலை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது இரண்டு அறைகளில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 16 சவரன் நகை மற்றும் 45 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

மேலும் கீழ்முருங்கை பகுதியில் கடந்த மூன்று மாதங்களில் அங்குள்ள கோவில் இரண்டு வீடுகளில் இருசக்கர வாகனம் கொள்ளை உள்பட பல இடங்களில் மர்ம நபர்களின் கைவரிசை நடந்தேறியுள்ளது.....

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.