ETV Bharat / state

கொள்ளையடிக்க சென்ற வீட்டில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த திருடன்! - harassment

குன்றத்தூர் அடுத்த கோவூர் பகுதியில் கொள்ளையடிக்க சென்ற வீட்டில் பொருள்கள் இல்லாததால் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கொள்ளையடிக்க சென்ற வீட்டில் பொருட்கள் இல்லாததால் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த திருடன் கைது

author img

By

Published : May 14, 2022, 12:00 PM IST

சென்னை: குன்றத்தூர் அடுத்த கோவூர் பகுதியில் உள்ள வீட்டில் தனது தாய், அக்காவுடன் வசித்து வந்த 22 வயது பெண்ணின் அறைக்குள் நள்ளிரவில் சென்ற மர்ம நபர் அந்தப் பெண்ணை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ததாக குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரின் பேரில் குன்றத்தூர் காவல் துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தீவிர விசாரணை செய்த போது வீட்டிற்குள் வந்த நபர் போதையிலிருந்ததாக கூறியுள்ளார்.

இதனை மையமாக எடுத்து கொண்ட காவல் துறையினர் கஞ்சா போதையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களை ஒவ்வொன்றாக சேகரித்தனர்.

அவ்வாறு சேகரிக்கப்பட்ட புகைப்படங்களை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் காண்பித்தபோது குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்த சதீஷ்(19) என்பவரின் புகைப்படத்தை உறுதி செய்தார்.

இதையடுத்து அந்த நபரை குன்றத்தூர் காவல் துறையினர் தீவிரமாக கண்காணித்து வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை பகுதியில் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் விசாரணையில், சதீஷ் அதே பகுதியில் வேலைக்கு செல்வது வழக்கம் இவர் வேலைக்கு செல்லும் போது பாதிக்கப்பட்ட பெண் வீட்டின் பால்கனியில் நின்று செல்போனில் பேசுவதை பார்த்தபடி சென்றுள்ளார்.

மேலும் சதீஷ் ஆண் நபர்கள் இல்லாத வீடுகள், ஆள்கள் இல்லாத வீடுகளை குறிவைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் நபர் என்பதால் அந்த வீட்டை குறித்து விசாரித்துள்ளார்.

அந்த வீட்டில் ஆண் நபர்கள் யாரும் இல்லை என்பதை அறிந்து கொண்ட அவர் சம்பவத்தன்று கஞ்சா போதையில் நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்து கதவை தட்டியுள்ளார். தனது அக்கா தான் கதவை தட்டுகிறார் என நினைத்து அந்த பெண் கதவை திறந்தவுடன் பெண்ணின் முகத்தில் பலமாக தாக்கி விட்டு அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்தி கொண்டார். மேலும் வீட்டில் இருக்கும் செல்போன், பணம், நகை ஆகியவற்றைத் தரும்படி கேட்டுள்ளார்.

தன்னிடம் ஏதும் இல்லை என்று அந்தப் பெண் கூறியதையடுத்து அந்த நபர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் கஞ்சா போதையில் அங்கேயே படுத்து உறங்கி விட்டு தனக்கு இரண்டு நாள்களில் ரூ.10 ஆயிரம் தயார் செய்து கொடுக்க வேண்டும் எனவும் இதனை வெளியே சொல்ல கூடாது எனவும் கூறி மிரட்டி விட்டு அதிகாலையில் அங்கிருந்து கிளம்பி சென்றதாக தெரியவந்தது.

மேலும் காவல் துறையினர் கைது செய்யும்போது சதீஷ் தப்பி ஓட முயன்ற போது ஒரு கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கபட்ட சிறுமிக்கு நேரில் சென்று ஆறுதல் - 1 லட்சம் நிதியுதவி அளித்த திமுக எம்பி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.