ETV Bharat / state

காட்பாடி அருகே ரூ.3 லட்சம் திருட்டு: மருத்துவர் வீட்டில் கைவரிசை - காட்பாடியில் மருத்துவர் வீட்டில் கொள்ளை

வேலூர்: காட்பாடி அருகே மருத்துவர் வீட்டில் ரூபாய் மூன்று லட்சத்தை திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

கொள்ளையடித்துச் சென்ற மருத்துவர் வீடு
கொள்ளையடித்துச் சென்ற மருத்துவர் வீடு
author img

By

Published : Jan 20, 2020, 4:45 PM IST

வேலூர் மாவட்டம் காட்பாடி பாரதி நகரைச் சேர்ந்தவர் மருத்துவர் ரமணய்யா. இவர் குடியாத்தம் சாலையில் கிளினிக் வைத்து, மக்களுக்கு மருத்துவம் பார்த்துவருகிறார்.

இவர், தனது உறவினரின் வீட்டு நிகழ்ச்சிக்காக நேற்று குடும்பத்துடன் சென்னை சென்றுள்ளார். இதனையறிந்த திருடர்கள் நேற்றிரவு மருத்துவர் வீட்டின் பின்பக்க கதவினை உடைத்து விட்டிற்குள் புகுந்துள்ளனர்.

பின்பு, பீரோ இருக்கும் அறைக்குள் சென்ற அவர்கள், அதிலிருந்த மூன்று லட்சம் பணத்தையும் 50 சவரன் நகைகளையும் திருடிச் சென்றுள்ளனர்.

காட்பாடியில் மருத்துவர் வீட்டில் திருட்டு

இன்று வீடு திரும்பிய மருத்துவர் குடும்பம், வீட்டின் பின்பக்க கதவு உடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தது. பின்பு, வீட்டினுள்ளே சென்று பார்த்தபோது, பீரோவிலிருந்த பணமும் நகைகளும் திருடுபோயிருப்பது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மருத்துவர் ரமணய்யா காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: அடுத்தடுத்த மூன்று வீடுகளில் நகை, பணம் கொள்ளை

Intro:வேலூர் மாவட்டம்

மருத்துவர் வீட்டில் 3 லட்சம் பணம் மற்றும் 50 சவரன் நகை கொள்ளை போலீசார் விசாரணைBody:வேலூர் மாவட்டம், காட்பாடி பாரதி நகரைச் சேர்ந்தவர் ராமணய்யா இவர் குடியாத்தம் சாலையில் தனியாக கிளினிக் வைத்து மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று உறவினருடைய விசேஷ நிகழ்ச்சிக்காக சென்னை சென்றுள்ளார். இதனை அறிந்த கொள்ளையர்கள் திட்டமிட்டு பின்பக்கமாக உள்ள பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3 லட்சம் பணம் மற்றும் 50 சவரன் நகை கொள்ளையடித்த சென்றுள்ளனர். நிகழ்ச்சிக்கு சென்ற மருத்துவர் குடும்பம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்கம் இருந்த கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ந்துபோன மருத்துவர் ரமணய்யா அருகில் உள்ள காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலூம் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை போலிசார் தேடி வருகின்றனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.